Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 787 articles
Browse latest View live

கண்ணா நீ வாழ்க !

$
0
0
திருக்கண்ணபுரம்

நித்திய புஷ்கரணி, நிமிர்ந்த கோபுரம்.

கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்

வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )

காற்றினிலே வரும் கீதம்  வலைத்தளத்தில் பாடல்  எடுத்தேன்.  கண்னன் பாட்டுக்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.

முக நூலில்  திருக்கண்ணபுரம் படம் போட்ட போது வல்லி அக்கா கண்ணபுரம் சேவித்தேன்
கவலை எல்லாம் மறந்தேன் என்று சொன்ன வுடன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய பாடல் இங்கு  மிகவும் பிடிக்கும் என்றேன். உடனே  எனக்கு அந்த பாடலை அனுப்பி கேட்க வைத்து மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.

நான் வரைந்த கண்ணன் (மார்கழி கோலம்)

Image may contain: 1 person, smiling, sitting and indoor

Image may contain: 1 person, smiling, sitting and indoor
கோலங்கள் பல செய்யும் கண்ணன்
Image may contain: 1 person, smiling, child and closeup

Image may contain: 1 person, smiling, standing, hat and closeup
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
எங்கள் வீட்டுக் கண்ணன்
Image may contain: 1 person, sitting, standing and indoor

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
Image may contain: 1 person, sitting and indoor
                                   சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
                                                      செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
Image may contain: table and indoor

Image may contain: people standing
போன வருடம் இந்த உறியின் படம் முகநூலில் பகிர்ந்த போது அதற்கு
 ஸ்ரீராம்   எழுதிய கவிதை.

//கிண்ணங்களில்
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
உறி போலச் செய்து
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
அவனுக்கும் தெரியும்
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//

கண்ணனின் குறும்பு  .
மருமகள்  வரைந்த கண்ணாடி ஓவிய தவழும் கண்ணன்

முறுக்கு, இனிப்பு, உப்பு சீடை, தட்டை  செய்வதை விட்டு வெகுகாலம் ஆகி விட்டது. அப்பம், அவல் பாயசம், வெண்ணெய், தயிர் வைத்து வணங்கி விடுவேன். இந்த முறை குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு பெரியவர், முறுக்கு, சீடை, அவல், கடலை எல்லாம் பாக்கெட் போட்டு விற்றார், மழையும் மாலையில் கடைக்குப் போக முடியாமல் பெய்து கொண்டு இருந்தது.

எளிமையாக அவல் பாயசம் மட்டும் வைத்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தேன். சார் ஊருக்கு போய் இருந்தார்கள்  வரும் போது கண்ணனுக்கு போளி வாங்கி வந்தார்கள் ,  வாழைக்காய் சிப்ஸ்  வாங்கி இருந்தார்கள் , தம்பி வீட்டுக்கு வந்தவன் பழங்கள் வாங்கி வந்தான். 

வீட்டிலிருந்த முந்திரி, திராட்சை, பாதாம், வெண்ணை இவற்றை  வைத்து சிறப்பாக்கிக் கொண்டார்  கண்ணன்.
No automatic alt text available.
மயிற்பீலிக் கண்ணன்

                                               
மாணவிகள் கொடியை உடையில் குத்திக் கொண்டு சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு திரும்புகிறார்கள். (சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.)
                                                   
சிறுபையன் தன் அப்பா பின்னால் தேசியகொடியை எடுத்து செல்கிறான். நான் அலைபேசியை எடுத்து படம் எடுப்பத்தற்குள் வேகம் எடுத்து விட்டது வண்டி.

அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.

                                                                    வாழ்க வளமுடன்.


மாலைச்சூரியன்

$
0
0

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்


//இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். //
ஆவணி மாதத்தில் சூரிய வழிபாடு செய்யப் போகலாம் இந்த கோயிலுக்கு.நான் எழுதிய பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஓவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு. ஆவணி மாதம் ஞாயிறுக்குச் சிறப்பு.
 எங்கள் பக்கம் (திருநெல்வேலி) ஒவ்வொரு  ஆவணி ஞாயிறு அன்றும் சூரியனுக்குப் பொங்கல் வைப்பார்கள். ஆவணி ஞாயிறு  அம்மன்களுக்கு கோயிலில்களில் விஷேச பூஜைகள் நடைபெறும்.

ஞாயிறு விரதம் இருந்தால் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம்,
ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் மேலும் சிறப்பு என்பார்கள்.

ஆவணி 3 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழன் வரை  மீனாட்சி கோயிலில் திருவிழா. ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில்    உள்ள  (வரும் லீலைகள்)  முக்கியமான கதைகள் காட்சியாக  நடத்தபடும்.


முதல் நாள்   -   கரிக்குருவிக்கு  உபதேசம் செய்த லீலை

இரண்டாம் நாள்   -  நாரைக்கு முக்தி கொடுத்தது

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள் -தருமிக்குப் பொற்கிழி கொடுத்த லீலை

ஐந்தாம் நாள் -கடும் வறுமையிலும் தவறாமல்  மகேஸ்வரபூஜை செய்த
சிவ அடியார் நல்லான்,தருமசீலா தம்பதியருக்கு உலவாக்கோட்டை அருளிய லீலை.

ஆறாம் நாள் - குருவுக்குத் துரோகம் புரிந்த சீடனின் அங்கங்களை  அவனுடன் வாள் போர்புரிந்து அவனின் அங்கங்களை வெட்டிய லீலை

ஏழாம் நாள் - வளையல் விற்ற லீலை
இந்த நாளில் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும்.  இதையொட்டி மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலை பட்டாபிஷேகம்.

எட்டாம் நாள் - நரிகளைப் பரிகளாக்கிய லீலை
மாணிக்கவாசகருக்காக  நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்த லீலை.

ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
மண்ணைப்படைத்தவர் மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை

பத்தாம் நாள் பாணபத்திரர் என்ற பக்தருக்கு அருளவும், கர்வம் கொண்ட பாகதவருக்குப் பாடம் புகட்டவும் இறைவன்  விறகு வெட்டியாக வந்து விறகு விற்ற லீலை.

பதினொன்றாம் நாள் - சட்டத்தேர்
ஈசன் அரசனாக வலம் வரும் நாள்

பன்னிரண்டாம் நாள் -  தீர்த்தவாரி
தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்.

நான் வளையல் விற்ற லீலை, பிட்டுக்கு மண்சுமந்த லீலை இரண்டும் பார்த்து இருக்கிறேன். போன வருடம்.

இனி, பதிவில் வந்த மாலைச்சூரியனைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகாலை சூரியன்  அழகு என்றால், மாலைச்சூரியன்  அதைவிட அழகு.
மலை வாயிலில் மறையும்  போது இன்னும் அழகு. கடற்கரையில் அஸ்தமனமாகும் போது அழகு .

காலை உதயத்தையும்,   மாலை அஸ்தமனத்தையும் பார்க்கக் கடற்கரையில் கூடும் கூட்டம்  உண்டு. பலரும் பார்த்து இருப்பீர்கள் தானே!


மனித வாழ்விற்கு  சூரிய ஒளியும் தேவை என்கிற  கவிதையை இன்று கே.பி. ஜனா சார் தன் முக நூலில் பகிர்ந்து இருந்தார்.  சூரியனைப்பற்றிய இந்த பதிவுக்கு  நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டேன் .

நன்றி: ஜனா சார்.


//சும்மா வாழ்வது மட்டும் போதாது. ..
சூரிய ஒளியும் சுதந்திரமும் 
சின்ன மலரொன்றும் வேண்டும் 
ஒரு மனிதனுக்கு.//

<>...
- Hans Christian Anderson
('Just living is not enough... one must have 
sunshine, freedom and a little flower.')

மெல்ல விடியும் பொழுதுபதிவில் காலைச்சூரியன் காட்சி இருக்கிறது.



மெல்ல மெல்ல விடியும் வைகறைப்
 பொழுதில்    காலைச் சூரியன் இருக்கிறது
அதனால் இந்தப் பதிவில் மாலைச்சூரியன் மட்டும்.



Image may contain: sky, outdoor and nature
மாலைச் சூரியன் காட்சிகள்
தம்பிவீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்கள்.


Image may contain: sky, twilight, outdoor and nature
மாலைச்சூரியன் உடலுக்கு  'டி விட்டமின் தரும்.  டி விட்டமினை எந்த மருந்து மாத்திரைகளும் தராது. மாலை நேரம் சூரிய ஓளியில், விளையாடுவது நல்லது.   மாலைச் சூரிய ஒளியில் நடப்பதும் நல்லது.
Image may contain: sky
மெல்ல மெல்ல கீழே இறங்கிக் கொண்டு இருக்கும் சூரியன்

No automatic alt text available.

Image may contain: sky, twilight, outdoor and nature
No automatic alt text available.
மாடியிலிருந்து மாலைச்சூரியன் மறையும் வரை எடுத்த படங்கள்
No automatic alt text available.
மயிலாடுதுறையில் இருந்தபோது அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து மாலைச்சூரியனை எடுத்த படங்கள்.

No automatic alt text available.

No automatic alt text available.


Image may contain: sky, night, tree and outdoor
வானமெங்கும் பரிதியின்  சோதி (பாரதி)
No automatic alt text available.
மாலைச் சூரியன் தென்னை மரத்திற்கு அலங்கார விளக்கு போட்டு இருக்கிறது.

No automatic alt text available.
தருக்களின்  மீதும் பரிதியின் சோதி (பாரதி)


மலைகள் மீதும் பரிதியின் சோதி (பாரதி)

மலைவாயில் போகும் மாலைச்சூரியன் (நார்த்தா மலை)

திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்   மணிராஜ் என்ற வலைத்தளம் வைத்து  தெய்வீக பதிவுகளை எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

பண்டிகைகள்  ஒன்றையும் விடாமல் பதிவு செய்து விடுவார், பண்டிகைகள் வரும் போது அவர் நினைவு வந்து விடும்.

அவர்கள்  எழுதிய 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'பதிவை படித்துப் பாருங்கள்.  படித்து இருப்பீர்கள் இருந்தாலும் மீண்டும் படிக்கலாம் ஞாயிறின் சிறப்பை.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்  திருமதி .ரஞ்சனி நாராயணன் அவர்கள் பதிவில்  சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்  மங்கலமாய் இயற்கையை. சூரியனை, மழையைப் பாடிப் பின் கதையைச் சொல்வதைச் சொல்கிறார்.

பின் சூரிய சக்தியை நம் நாட்டில் நல்ல முறையில் பயன்படுத்தி மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கலாம். மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க ஓரே தீர்வு  சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது தான்.

சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?
சோலார் சக்தியின் நிறைகள்:
சோலார் சக்தியின் குறைகள்:

என்று அனைத்தையும் பற்றி விரிவாக சொல்லி சூரியனை வாழ்த்தி நிறைவு செய்கிறார், படிக்க வில்லை என்றால், நேரம் இருந்தால் படிக்கலாம்.


நாங்கள்கைலாயம் போனபோது நிறைய இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் இருந்ததையும், விடுதிகளில் விளக்குகள் இருந்ததையும் பார்த்தோம். மாலை ஆறுமணியிலிருந்து இரவு ஒரு மணிவரை அந்த விளக்குகள் எரியும். அப்புறம் நாம் கொண்டு போய் இருக்கும் டார்ச்சு தான் நமக்குத் துணை. 

அந்த இடத்தின் பெயர் தார்ச்சென் 
   



குளிர்ப் பிரதேசங்களில் குறைவான நேரம் தான் சூரிய ஓளி கிடைக்கும் அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்தும் போது வெப்ப நாட்டில் இருக்கும் நாம் அதிகம் பயன்படுத்தலாம்.

கற்கை நன்றேஎன்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் 


சோலார் பவரும் என் அனுபவங்களும் - என்று நாலு பதிவுகளும் எழுதி இருக்கிறார்.



'கபீரின் கனிமொழிகள்'என்ற வலைத்தளத்தில் ஆன்மீகப் பதிவுகளும் எழுதுவார் அருமையாக.


இதில்  கபீர்தாஸ், சிவ வாக்கியர், பகவத்கீதை  இவற்றிலிருந்து
 சிலவற்றைப் பகிர்ந்து இருப்பார். நன்றாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.


நான் எடுத்த சூரியனின் படங்களுடன்  சூரியனைப் பற்றி அருமையாக  நிறைய பேர் எழுதிய பதிவுகளில்  நான் படித்த பதிவுகளையும்  இங்கு கொடுத்து இருக்கிறேன்.

                                                                         வாழ்க வளமுடன்!




உலக புகைப்பட தினம்

$
0
0











                                               வாழ்க வளமுடன்

விநாயகர் சதுர்த்தி

$
0
0








வந்தார் விநாயகர்  தந்தார் அருளை  பழைய பதிவை  வாசிக்க வில்லை என்றால் வாசிக்கலாம்.

//இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது.  ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை  மண்பிள்ளையார் சிலை  நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான்.  அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள்.  மகன் போன முறை  செய்த  பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.//

இன்று எங்கள் வீட்டுக்கு மண் பிள்ளையார் வருவாரா என்று சந்தேகமாய் இருந்தது . நேற்று  வண்ணப் பிள்ளையார்கள் தான் விற்றார்கள். இன்று காலை போய் பார்த்த போது  களிமண் பிள்ளையார் செய்பவர் கடை போட்டு இருந்தார், ஆனால் அவரைச் சுற்றிக் கூட்டம் என்று வந்து விட்டார்கள். இந்த முறை மஞ்சள் பிள்ளையார் மற்றும் நம் வீட்டில் இருக்கும் நிறைய பிள்ளையார்களை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி விடலாம் என்று முடிவு செய்தாலும் , எதற்கும் போய்ப் பார்த்து வருகிறேன், கூட்டம் இல்லையென்றால் வாங்கி
வருகிறேன் என்று போனார்கள் கடைக்கு. அவர் அருளாலே அவர் தாள் வணங்க 
வந்து விட்டார் வீட்டுக்கு .

இவர்கள் வாங்கும் போது இன்னொருவருக்கு செய்து முடித்து விட்டு சார் உங்களுக்கு வேண்டுமா? செய்யவா  ?என்று கேட்டு செய்து கொடுத்து இருக்கிறார்.
அப்புறம் கூட்டம் நிறைய வந்து விட்டதாம். அச்சு வைத்து தான் செய்கிறார்.  ஆனாலும் கூட்டத்திற்கு செய்வது கஷ்டம் தான். .

Image may contain: indoor



விநாயகர் சிலைகளைக் கரைக்கும் வழக்கம் ஏன் ஏற்பட்டு இருக்கும் என்பதைப் பற்றிப்
 படித்த செய்தி:-

//ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்று மணலை அடித்து கொண்டு போய் இருக்கும். அதனால் நீர் நிலத்தில் நிற்காமல் கடலை சென்று அடையும். ஆனால் களிமண்ணில் நீர் இறங்கும். களிமண்ணில் உள்ள இடத்தில் நீர் கீழே இறங்கும்.அதனால்  விநாயகரை  நீர் நிலைகளில் கரைக்க செய்தார்கள். ஈரக்களிமண்   நீரோடுசீக்கீரம் கரைந்து  நீரின் வேகத்தோடு சென்று விடும். காய்ந்த களிமண்  அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில்   வரும் நீரானது   பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும். //

நன்றி- தினமலர்.

ஆனால் இப்போது ஆற்றில் மணலும் இல்லை, நீரும் இல்லை. இருக்கும் நீர்நிலைகளில்  விநாயகரை எப்படிக் கரைப்பது? நான் வீட்டில் வாளியில் கரைத்து என் தொட்டிச் செடிகளுக்கு விட்டு விடுவேன். இப்போது  தொட்டி சின்னது இரண்டு தான் இருக்கிரது அதனால் மரம் செடி இருக்கும் இடத்தில் கொண்டு விட வேண்டும். அதனால் சின்னப் பிள்ளையார் தான் வாங்கினோம்.

சேலம் மாணவிகள் செய்த மாதிரியும் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கலாம்.
சேலம் மாணவிகள் 6000  விதைப்பந்து விநாயகர்களை செய்து சாதனை செய்து இருக்கிறார்கள். அவற்றை இன்று மரம் இல்லாத இடங்களில்  போடப் போகிறார்கள். பெரியவிநாயகர் சிலைகளைச் செய்து அவை கரைக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப் படுவதற்குப் பதிலாக இப்படி செய்வது நல்லது.  

  விதைப்பந்து விநாயகர்கள் எல்லாம்  மரங்களாய் வளர்ந்து  வளர்ந்து நல்ல மழையைக் கொடுக்க வேண்டும். 

அந்த குழந்தைகளைப் பாராட்டுவோம். வேந்தர் தொலைக்காட்சியில் விதைப்பந்து விழாவைக் காட்டினார்கள். குழந்தைகள் விதைப் பந்து விநாயகருக்கு கொழுக்கட்டைகளையும் செய்து வணங்கினார்கள். 

அவர்கள் அனைவருக்கும்  விநாயகர் அருள் கண்டிப்பாய் கிடைக்கும்.தன்னலம் பார்க்காமல் பொதுநலத்திற்கு உழைக்கும் குழந்தைகள் வாழ்க!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

 அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும்பவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், அவர்  எல்லோருக்கும் நலமே அருள வேண்டும்.


                                                            வாழ்க வளமுடன்.

விநாயகர் சதுர்த்தி விழாவும் சில செய்திகளும்.

$
0
0
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவாய்  'சதுர்த்தி எண்ணங்கள்'என்ற பதிவில்
பிள்ளையார் செய்ய வேண்டுமாஎன்று பாலசுப்பிரமணியம் சார்
ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார். நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அழகான எளிமையான செய்முறை. அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் என் பேரனும் இதே போன்ற பிள்ளையார் செய்திருக்கிறான் என்று போட்டிருந்தேன்.
சார் சொல்வது போல் சில பதிவுகள் நம்மை எழுத தூண்டும் பதிவுகளாய் அமையும் என்பது உண்மையே!

 என் பேரன், ஓவியம், கைவேலைகள் கற்றுக் கொள்கிறான். அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் பிள்ளையார் செய்ய.அவன் செய்த பிள்ளையார் தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு.

என் மகன், சிறுவனாக இருக்கும்போது நான் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டு இருக்கும்போது கொஞ்சம் மாவு எடுத்துப் போவான், அதில் வித விதமாய்ப் பொம்மைகள் செய்வான். பிள்ளையார் சதுர்த்திக்குக் களிமண் பிள்ளையார் வாங்கப் போனால்,  கூடவே கொஞ்சம் களிமண் வாங்கி வருவான். அதை வைத்துச் சின்ன பிள்ளையார் செய்து விடுவான். அதற்குத் தனியாக அவன்சதுர்த்தி கொண்டாடுவான்.சாக்பீஸில் நிறைய உருவங்கள் செய்வான்.படம் பார்த்தால் உடனே அதைப்பார்த்து வரைவான்.
இப்போதும் ஓய்வு நேரத்தில் கேன்வாஸ் ஓவியம் வரைவான் அதை நண்பர்கள் வீட்டு விழாக்களுக்கு பரிசளித்து விடுவான். எங்களுக்கும், கயிலை படம், நடராஜர் படம் வரைந்து தந்து இருக்கிறான்.

பனி சிற்பம்.  உட்லை வருத்திக் கொண்டு செய்த அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’

//என் மகன் வசிக்கும் நியூஜெர்சியில் மூன்றாம் தேதிஅன்று(3/1/2014)  பனிப் பொழிவு இருந்திருக்கிறது. அந்தப் பனிப்புயலுக்கு 'ஹெர்க்குலிஸ்’  என்று பெயர் இட்டு இருக்கிறார்கள்.   பனி விழுந்த சமயத்தில் என் மகன் அதைச் சேகரித்து , சிவலிங்க உருவம் செய்து, ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’ என்று பெயரிட்டு வழிபட்டான். போனமுறை பனிக்காலத்தில் பனி மனிதன் உருவமும், அதற்கு முந்தைய தடவை  ’பனிப்புயல் காத்த விநாயகர்’ உருவம் செய்து இருந்தான்.


அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். //


//என் மகன் அமெரிக்காவிலிருந்து படங்கள் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து மகிழ்கிறார்கள் மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். நாமும் பிராத்தனை செய்வோம்.//


  . பனிபுயல் காத்த விநாயகர்




இப்போது அப்பாவைப்போல் என் பேரனும் படம் பார்த்து வரைகிறான்


 .

                                               கேன்வாஸ் ஓவியம்  - வானம், நிலா, அருவி.

 பேரன் கவினுக்கும் ஓவியம்  வரைய ஆர்வம் இருந்ததால்  அதை மேலும் மெருகேற்ற ஓவியப்பள்ளியில் சேர்த்து இருக்கிறான் என் மகன். அவனும் அழகாய் வரையக் கற்றுக் கொண்டு இருக்கிறான்.அங்கு தான் இந்தப் பிள்ளையாரைச் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
Modeling kids clay  யில் செய்து இருக்கிறான் பிள்ளையாரை.

பிள்ளையார், குழந்தைகளின் நண்பன்.  இந்த குட்டி நண்பன் கவினைக்  காக்கவேண்டும் நாளும்!


No automatic alt text available.
பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, மோதகம்  என்று அம்மா செய்து தந்ததை ஒன்று ஒன்று வைத்து இருக்கிறான் , அப்புறம் சாப்பிட்டு விட்டு எது வேண்டும் என்று கேட்கிறாரோ அதைக் கொடுப்பானாம் மீண்டும். (ஏன்  1,1,1,1 என்று கேட்டதற்கு பதில் அவன்  சொன்னது)


Image may contain: night
 என் பிள்ளையாருக்கும் குடை வேண்டுமே!


தேவகோட்டைஜி (கில்லர்ஜி)        பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்? என்று அருமையான விழிப்புணர்வுப் பதிவு எழுதி இருக்கிறார். பண்டிகைகள் நாளுக்கு நாள் ஆடம்பரமாய்ப் போவதை அழகாய் சொல்லி இருக்கிறார்.   தேவகோட்டைஜியும் அழகான பிள்ளையார் காணொளி போட்டு இருக்கிறார். 2015 ல் புதுக்கோட்டை பதிவர் திருவிழா  நடத்தும் மின் இலக்கியப் போட்டிக்கு எழுதிய பதிவு அது.

அவர் சொல்வது போல் பண்டிகைகள் போகும் போக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.

அருகம்புல், எருக்கம் பூ  வைத்து எளிமையாகக் கும்பிட்டாலே போதும், பிள்ளையார் அருளைத் தருவார்.

அவருக்கு   தொலைக்காட்சியில் 21 வகையான இலைகளை வைத்து வணங்கினால் நல்லது, அவை இந்த இந்த பலனைத் தரும் என்று ஒரு சோதிடர் சொன்னார்.(அப்படியாவது அந்த மரம் செடிகளை வளர்க்கட்டும். அதுவும் நல்லதுதான்.)

அவர்  சொன்னதை வைத்துக் கொண்டு   சிலர் அந்த 21 இலைகளைச் சேகரித்து   பேக் செய்து,"விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் எங்களிடம்  கிடைக்கும், தேவையானவர்கள்  எங்கள் அலுவலக தொலைபேசியில் புக்கிங் செய்யுங்கள்  22, 23 தேதிகளில் புக் செய்பவர்களுக்கே  கிடைக்கும்."
 என்று துண்டு விளம்பரம் வீடு வீடாய் போட்டுச் சென்றார்கள். விழாவிற்கு முந்தின நாள் கொண்டு வந்து கொடுத்தபின் பணம் கொடுக்கலாம் என்று போட்டு இருந்தது எவ்வளவு பணம் என்று சொல்லவில்லை. இலவச டோர் டெலிவரி என்று போட்டு இருந்தார்கள்.

21 பழங்கள் , 21 பூவும்    அந்த ஜோதிடர் சொன்னார் அதை அவர்கள் சேகரித்து டோர் டெலிவரி  செய்வதாக சொல்லவில்லை. சேகரித்த பின் யாரும் வாங்கவில்லை என்றால்  கஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

பண்டிகைகள் எளிமையாகக் கொண்டாட முடியாத அளவு விலைவாசிஏறி கிடக்கிறது. நாவல்பழம் எளிமையான பழம். முருகன் ஒளவைக்குக்
கொடுத்த காலம். இப்போது 100 கிராம் 30 ரூபாய். விளாம்பழம்  இரண்டு 80 ரூபாய் ,  நாலு சின்ன பேரிக்காய்   80 ரூபாய்,  கொய்யா கால்கிலோ வாங்கினால் 30 ரூபாய் அரைக்கிலோ வாங்கினால் 50 ரூபாய் என்கிறார்கள் , எல்லாப் பழங்களிலும்  ஒன்று ஒன்று போடு என்று சொன்ன அம்மாவைத் திட்டுகிறார்கள்  "எந்த காலத்தில் இருக்கிறே ! ஒவ்வொரு பழமும் ஓவ்வொரு ரேட்டு முடிந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி செய் "என்கிறார்கள். பெரிய பழக்கடையிலும் வியாபாரம் சூடு பறக்கிறது.

பண்டிகைக்காலங்களில் கிடைக்கும்  பழங்கள், காய்கறிகளைப் பக்தியோடு இணைத்து மக்களை உண்ண வைத்தார்கள், உடல் நலத்திற்கு.
 கால சீதோஷணத்திற்கு ஏற்ற மாதிரி அவை இருக்கும்.

எள் உருண்டைக்கு எள் வாங்கி நாமே செய்தால் 60 ரூபாய்க்கு நிறைய உருண்டை வரும். அதுவும் இப்போது இயற்கை அங்காடியில் கிடைக்கிறது , ஒரு சின்ன டப்பாவில் 7 உருண்டைகள் அடங்கியதின் விலை 60 ரூபாய்.
முடியாதவர்களுக்கு இதனால் நன்மைதான், காலம் மாறுது நீயும் மாறு இல்லையென்றால் கஷ்டம். இப்படிச் சொல்வது என் கணவர்!

                                                   வாழ்க வளமுடன்!

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

$
0
0
'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலை நினைவு படுத்தியது இந்த பதிவு.  படித்துப் பாருங்களேன்.

படிப்பு மட்டும் தான் அது கிடைக்கவில்லை என்றால் தற்கொலை வரை போகும் குழந்தைகளின் முடிவு கவலை அளிக்கிறது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருக்க  கைவினை கற்றுக் கொண்டால்  ப்ளூவேல் தூரமாகும் . குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், இந்தப் புத்தகத்தைப் பரிசளியுங்கள். என்று சொல்கிறார்கள் இவர்கள்.

காலத்துக்கு ஏற்ற பதிவு.

இன்று சனிக்கிழமை  'எங்கள் ப்ளாக் 'பாஸிடிவ் செய்தியிலும்
 இது போனற செய்தி இருக்கிறது.


குழந்தைகளை விளையாட விடுங்கள் கைவினை கற்றுக் கொடுங்கள்



//கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என சதா அவர்களை நச்சரிக்கிறோம். விளையாடவோ, அவர்களுடைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவோ சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறோமா?
தொலைக்காட்சிகளின் முன் மணிக்கணக்காக அமர்ந்து தாங்களாகவே தேவையில்லாத மனசிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை படைப்பாற்றலை தூண்டவும் நாங்கள் எடுத்திருக்கும் சிறு முயற்சி ‘செய்து பாருங்கள்’ இதழ்! கைவினைப் பொருட்கள் செய்முறைக்கெனவும் நல்லதொரு வாழ்வியலை அறிமுகப்படுத்தவும் தமிழில் வெளிவரும் முதல் இதழ் இது. இதோ ‘செய்து பாருங்கள்’ இரண்டாம் இதழாக ஜுலை-செப்டம்பர் இதழ் வெளியாகியிருக்கிறது. பளபள தாளின் முழுவண்ணத்தில் தயாராகியிருக்கிறது.//
கீழே வருவது என்னுரை:-

முன்பு நம் கண் எதிரே குழந்தைகள் விளையாடினார்கள். இப்போது விஞ்ஞான வசதிகள் அதிகமாக , அதிகமாக நம்மை விட்டுத் தூரப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நாள்தோறும்வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. விளையாட்டைப் பற்றி விரிவாகக்  கலந்துரையாடுகிறார்கள்.  எல்லா துறையைச்
சேர்ந்தவர்களும்.

தெரியாத குழந்தைகளும் அதில் அப்படி என்ன இருக்கு என்று விளையாட ஆவலை தூண்டுவது போல். தீங்கு விளைவிக்கும் என்றால் முற்றிலும் தடை செய்ய வேண்டியது தானே!

சின்ன குழந்தைகள் இந்த வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவான் என்று குழந்தை கையில் செல்லை கொடுத்து விட்டு உணவு  ஊட்டுகிறார்கள்.
அந்த குழந்தை அம்மாவின் அன்பையும்  உணவூட்டும் அழகையும் ரசிக்கவில்லை, உணவின் ருசியையும் அறியவில்லை.

சில குழந்தைகள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் செல்லை எடுத்து பார்க்கிறது டச் ஸ்கிரீன் இல்லையா? கேம் இல்லையா?  தான் பார்க்கும் கார்ட்டூன் படம் இல்லையா ? என்று கேட்டு தூக்கிப் போட்டு விடுகிறது.

உறவினர் வீட்டுக் குழந்தை உடைத்த செல்கள் எத்தனை? அவர்கள் அதைப் பெருமையாகப் பேசுகிறார்கள் அவன் பார்க்கும் வீடியோ வரவில்லை கோபத்தில் விட்டு ஏறிந்து விட்டான், உடைந்து விட்டது ரிப்பேர் செய்யக் கொடுத்து இருக்கிறோம் என்கிறார்கள்., அந்தப் பொருளின் விலையைப் பற்றிக் கவலைபடாமல்.

குழந்தை எப்படி முக்கியமோ அது போல் நாம் உழைத்துக் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்களும் முக்கியம்.  அழும் குழந்தையின் வாயை அடைக்க என்று தற்காலியத்திற்கு கொடுக்கிறோம் என்கிறார்கள்.

ஆசிரியர், பள்ளிகளில் முன்பு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து  வீட்டுப் பாடங்களைக் கொடுத்தார்கள், அதைத் திருத்தும்   பணி ஆசிரியர்களுக்கும் உண்டு, இப்போது  ஆசிரியர்கள் கணினியில் வேலை கொடுக்கிறார்கள் அதைத் தேடிப்  பாடக்குறிப்புகளைத்  தயார் செய்து மாணவன்  ஜெராக்ஸ் எடுத்துப் போக வேண்டும். பிரிண்ட் செய்து கொண்டு போக வேண்டும்.

 அதனால் மாணவன் வீட்டில் பெற்றோர்களிடம்,
 "படி! படி!  என்று சொல்கிறீர்கள், வேண்டிய வசதி செய்து தாருங்கள்"என்கிறார்கள். கணினி, பிரிண்டர், எல்லாம் வாங்கித் தரச் சொல்லிக் குழந்தைகள் பெற்றோரை நச்சரித்து வாங்குகிறார்கள்.. பெற்றோர்களும் கஷ்டப்பட்டு வாங்கித் தருகிறார்கள், சிலர் கஷ்டப்படாமல் கேட்டதும் வாங்கித் தந்து விடுவார்கள். பெருமையாக எல்லோரிடமும் பாடங்களைக் கணினியில் செய்கிறான் என்று பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளியில் விழா என்றால் முன்பு ஆசிரியர்தான் நடனம் சொல்லித் தருவார்.
இப்போது ஏதாவது சினிமாப் பாடலைச் சொல்லி நீங்களே வீடியோ போட்டுப் பார்த்து அதே போல ஆடப் பழகி வாருங்கள் என்கிறார்கள்.

முன்பு கல்விஅதிகாரி வரும் போது , சுதந்திரதினம், குடியரசு தினம் , 11வது மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா , ஆண்டு விழா என்று  எவ்வளவு நிகழச்சிகள்!  அத்தனைக்கும் ஆசிரியர் மேற்பார்வையுடன் தான் ஆடல் பாடல்கள் நடந்தன. பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் என்று பாதுகாவலர்கள் போற்றுபவர்கள் இருந்தார்கள்.

'அப்பாவுக்காக"    என்ற சினிமாவில்    சமுத்திரகனி  அவர்கள் அழகாய்ச்  சொல்லி இருப்பார்.

பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வரும் வேலை குழந்தைக்குக் கொடுத்தால் எல்லோரும் கடையில் செய்து விற்பதை வாங்கிக் கொடுப்பார்கள் ஆசிரியர் குழுவும் கடையில் வாங்கி வந்து  கொடுத்ததில்  எது அழகோ அதற்குப் பரிசு அளிப்பார்கள். அதைக் கண்டித்து ஆசிரிய நிர்வாக குழுவிடம் கேள்வி கேட்பார் அதனால் உங்கள் குழந்தைக்கு இங்கு  இடம் இல்லை என்பார்கள்  வேண்டாம் உங்கள் பள்ளி என்று அழைத்து வந்து விடுவார் குழந்தையை .  அதன் பின் மனைவி,  அக்கம் பக்கத்தில் மற்றும்
உறவில்   அவர் சந்திக்கும் பிரச்சனைகள்  பின் அவருக்கு குழந்தையை வளர்ப்பில் கிடைக்கும் வெற்றியைச் சொல்லும் கதை.

குழந்தைக்குக் கொடுத்த வேலையை, குழந்தை, பெற்றோர், தாத்தா, பாட்டி, சகோதரர்கள் உதவியுடன் அவனே செய்து கொண்டு போனால் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பெருமிதமும்  மகிழ்ச்சியும் கிடைக்கும், அவனே செய்து இருப்பதை ஆசிரியர் பாராட்டும் போது  மாணவனின் மகிழ்ச்சிக்கு  ஈடு இணை இல்லை.

விஞ்ஞானத்தால் நன்மையும், தீமையும் உண்டு. நன்மையை எடுத்துக் கொள்வோம், தீமையை விலக்குவோம்.

                                                          வாழ்க வளமுடன்.

மகாகவி பாரதியார் கவிதைகள்

$
0
0
பாரதியார் நினைவு நாளில்  பாரதியாரின்
கவிதை  விநாயகர்  நான்மணி மாலையிலிருந்து சில :-

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு  நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனகே.




No automatic alt text available.
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல் ,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறு வயது;
இவையும் தரநீ கடவாயே.


Image may contain: 1 person, indoor


கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க !
வாரணமுகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரணமுகத்தான்  அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் , பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம் ; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும் ; அகக்கண் ஓளிதரும்;
அக்கனி தோன்றும்  ; ஆண்மை வலியுறும் ;
திக்கெலாம் வென்று  ஜெயக்கொடி  நாட்டலாம் .
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சதீரும், அமுதம்விளையும் ;
விந்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை  எய்தவும்
இங்கு நாம் பெறலாம் ; இஃதுணர் வீரே.

பாரதியின் கவிதைகள் புதிய சக்தியை ஊட்டும். புத்துணர்வு கொடுக்கும்.
தேசிய கவிக்கு வணக்கங்கள்.

                                                                   வாழ்க வளமுடன்.!

Article 0

$
0
0
அனைவருக்கும் நவராத்திரி  வாழ்த்துக்கள்.
எல்லோரும் நலம் தானே? நாங்கள்  மகன் ஊருக்கு வந்து இருக்கிறோம்.
இங்குதான்  இந்த முறை நவராத்திரி பண்டிகை.
மகன் இருப்பது அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ். போனவாரம் இங்கு வந்தோம்.

Image may contain: indoor

                                                மகன் வீட்டுக் கொலு

திடீர் பிரயாணம். யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காணோம் என்று தேடினீர்களா?

எல்லோர்  பதிவுகளையும் படிக்க நிதானமாய் வருவேன். பண்டிகை என்பதால் கொலு பார்க்க நண்பர்கள், உறவினர்கள் வருகிறார்கள்.
எங்களையும் கொலுப் பார்க்க சில நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

Image may contain: indoor
இந்த கொலுவில் காய்கறி கல்யாணம் சிறப்பு.

No automatic alt text available.
கத்திரிக்காய் பரங்கிகாய் கல்யாணம்.



No automatic alt text available.
சின்ன மலைக் கோயில் , பார்க், தெப்பக்குளம்.
Image may contain: one or more people and indoor
ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலில்  விளக்கு பூஜை செய்யும் பொம்மை இந்த வீட்டில் நன்றாக இருந்தது.

Image may contain: flower, table and indoor
பார்வதி திருமணம், கார்த்திகை பாலன் பிறப்பு, மற்றும் பூலோக மக்கள்
திருமணக் காட்சி.

Image may contain: 2 people, people standing
உழவுக்கு செல்லும் கணவனுக்கு உணவு எடுத்து செல்லும்
உழவனின்  மனைவி பழையக் கால பொம்மை  அழகு.

Image may contain: indoor
கொலுவிற்கு வரும் கிரிகெட் ரசிகர்களுக்கு  பிடித்த பொம்மை.

Image may contain: 1 person, shoes
மற்றொரு வீட்டில் :-

 கோலம் போடுதல், சாதம் வடித்தல், அம்மி அரைத்தல், ஆட்டுக்கல்லில் அரைத்தல், திருவையில் திரித்தல், முறத்தில் புடைத்தல் சிறப்பு பொம்மை .
உரலில் இடிப்பது விட்டு போனது போல!




அயல் நாட்டில் இருந்தாலும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எல்லா குழந்தைகளும் கர்நாடக இசை பயின்று பாடுவது மிகவும் மகிழ்ச்சியாக் இருக்கிறது.

நவராத்திரி பார்க்க வந்த குழந்தைகள் பாட சொன்னவுடன் உடனே பாடுவது மிக சிறப்பு. நன்றாக பாடுகிறார்கள். சில குழந்தைகள் ஆங்கிலத்தில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு பாடினார்கள். அரிசோனா தமிழ் பள்ளியில்  படிக்கும் குழந்தை தமிழில் எழுதி வைத்து இருந்த திருப்புகழ் பாடினான்.

விழாக்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் நாள். குழந்தைகள் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு கூடி விளையாட கிடைத்த நாள். அம்மாக்கள் குழந்தைகளை வீட்டுக்கு போகலாம் வா என்று கூப்பிட்டால் மனசே இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அம்மா என்று விளையாட கெஞ்சும் குழந்தைகள். மொத்ததில் மகிழ்ச்சியை தரும் விழாதான்.

தூரத்திலிருந்து வருவதால் தினம் கலவை சாதங்கள் சுண்டல் உண்டு எல்லோர் வீடுகளிலும். சில சமயம் நண்பர்கள் நாங்கள் இந்த பிரசாதம் கொண்டு வருகிறோம் என்று சொல்லி ஆளுக்கு ஒன்று கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விழாவை சிறப்பிக்கிறார்கள்.

நலங்கள் நல்கும் நவராத்திரி 2013 ல் நியூஜெர்சி யில் கொண்டாடிய  கொலு சுட்டி படிக்கலாம்.

பொளச்சுக் கிடந்தா வரேன் தாயி!

பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.


நவராத்திரி வாழ்த்துக்கள்
மாயவரம் புனூகீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா  மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரங்கள் இந்த பதிவில்.
சகலகலாமாலை, பாடல் பகிர்வும்  இருக்கிறது.

எங்கள் வீட்டுக் கொலு  ;- எளிமையாக வைத்த கொலு.


 அம்மன் அலங்காரம்  மகன் செய்த

ஒலி, ஒளிக்காட்சி சரஸ்வதி சபத காட்சி பின்னனியில் பார்க்கலாம்.
மருமகள் அலங்காரம் செய்தாள்.

நிறைய இருக்கிறது பேசவும், சொல்லவும். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பதிவுகளை படித்து கருத்திட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

மனபலமும், உடல் நலமும் தெளிந்த நல் அறிவும் வேண்டும் என்று

  அம்மனிடம்  வேண்டிக் கொள்கிறேன்.

அப்பாதுரை சார் சொன்னது போல் கொலுவுக்கு முன்னாலும் உழைக்க வேண்டும், கொலு முடிந்த பின்பும் உழைக்க வேண்டும். அதற்கு  உடல் நலமு, மனபலமும்  வேண்டும். அதை அன்னை அருள்வாள்.

கொலுபடிகளை அமைத்து வைக்கும் வரை மலைப்பு,!வைத்தபின் மகிழ்ச்சி.
அது போல் பொம்மைகளை மீண்டும் அதன் அதன் இடத்தில் பத்திரமாய் எடுத்து வைக்கும் போது மலைப்பு ! எடுத்து வைத்து விட்டால் மகிழ்ச்சி.
கொலுபடிகள் இருந்த இடத்தைப் பார்க்கும் போது வெறுமை ! மீண்டும் அடுத்த வருடத்தை எதிர் நோக்கும் உள்ளம்.

அடுத்த வருடம் வரை நவராத்திரி நினைவுகளை அசைபோடும் உள்ளம்.பேரனின் ஓவியங்க்கள் அவன் விளையாட்டு சாமான்கள் என்று தனியாக அவன் அறையில் வைத்து அனைவரையும் அழைத்து சென்று காட்டி மகிழ்ந்தான்.

மருமகள் பெண்கள்,  ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு பொருட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தினாள்.

விழாக்களில்  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படாது. பண்டிகைகளை அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

                                                   வாழ்க வளமுடன்.















முதியோர் நாள்

$
0
0

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.


முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு. 

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!


தீபாவளி நல் வாழ்த்துக்கள்

$
0
0

என் கைகளுக்கு மருமகள் வைத்த மருதாணி
மருமகள் கைகளுக்கு மகன் வைத்த மருதாணி
தீபாவளி துணிமணிகள்
தீபாவளி பலகாரங்கள். 

இவை நான்கு  வருடங்களுக்கு முன் நியூஜெர்ஸியில்   கொண்டாடிய போது   எடுத்த படங்கள்.

எல்லாப் பண்டிகைகளுக்கும் கையில் மருதாணி வைத்து விடுவேன். அது தெரிந்த மருமகள் வட இந்தியக் கடையில் மருதாணிக் கோன் வாங்கி என் கைகளுக்கு வரைந்து விட்டாள். எனக்கு மருதாணி இலையை அரைத்து அதை வைத்து தான் பழக்கம். என் குழந்தைகள், பேத்தி எல்லாம் வேறு டிசைன் வரைய சொன்னால் முதலில் கையில் பேனாவால் வரைந்து விட்டு அதன் மேல் மருதாணியை வைத்து விடுவேன்.

மகன் மருமகளுக்கு புஷ்வாணம், தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பு போல் வைத்து விட்டான்.


போன வருடம் எங்கள் வீட்டில்  (மதுரையில்) எளிமையாக தீபாவளி அன்று காலை பஜ்ஜி, வடை, சுசியம் செய்து கும்பிட்டாச்சு.

தீபாவளி நினைவலைகள்  பதிவை எப்போது மீள் பதிவாக போட்டாலும் விரும்பிப் படிக்கிறார்கள். படிக்க எண்ணம் இருந்தால் மீண்டும் படிக்கலாம்.
எல்லோருக்கும் அந்த   சிறு வயது நினைவு இருக்கிறது . அந்த நாள் மீண்டும் வராதா என்ற ஆசையும் இருக்கிறது. 

பண்டிகைகள் எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் கொடுத்தது அன்று. அந்த அளவு இப்போது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கே இருக்கும் நிறையபேருக்கு தங்கள் உறவுகளுடன் பண்டிகை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. சிலருக்கு ஊரிலிருந்து பெற்றோர் வந்து இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகள் வரும் நாள் தீபாவளியாக இருந்தது.  கூடவே  இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான்.

மாலை மலரில் படித்த செய்தி :-

//தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாடவேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையைக் கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டுக்கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன், சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.//

எப்படி இருந்தாலும்  பண்டிகைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கே!



இறைவன் எல்லோருக்கும் மன சந்தோஷத்தை கொடுக்க வேண்டும்.


இந்த வருடம் மகன் வீட்டில் தீபாவளிப் பண்டிகை எங்களுக்கு.  அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


                                                                  வாழ்க வளமுடன்.!

--------------------------------------------------------------------------------------------------------------------------

பறக்கும் வண்ண பலூன்..

$
0
0
வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறது மனம்.
சிறு குழந்தைகளுக்கு வானத்தில் பறக்கும் விமானம், பட்டம், பலூன் எல்லாம் பிடிக்கும் தானே! வயதாகி விட்டால் குழந்தையாகிவிடுவார்கள் என்பார்கள் நானும் குழந்தையாகி  விடுகிறேன்.

சின்ன பாப்பாவிடம் சிலுக்குச் சட்டை சீனா பொம்மை, பலூன் வேண்டுமா என்ற பாடல் இருக்கே!

"சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா"  படம் - வண்ணக்கிளி

 பறக்கும் வண்ண பலூன்களை  அடிக்கடி பார்க்க முடிகிறது, மகன் வீட்டுக்கு அருகில். விடுமுறை நாளில் அதிகமாய் பார்க்கிறேன். ஊர் சுற்றிப் பார்க்க மக்கள் மகிழ்ச்சியாகப் போகிறார்கள் அதில்.  எங்கள் வீட்டைக் கடந்து போகும்போது மிக அருகில் வந்தால் என்னைப் பார்த்துக் கை அசைத்து செல்வர்.

இந்த பலூன்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் பாடல்: 'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே!"
சாந்தி நிலையம் படத்தில் வரும்  பாடல்.

அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸில்  கள்ளிச் செடிகள் நிறைய  இருக்கிறது. அந்த செடியின் படம் வரைந்த பலூன்கள் அதிகமாய்ப் பறக்கிறது.

காலை நடைப்பயிற்சிக்கு செல்லும்போதும் தோட்டத்தில் நிற்கும் போதும் பார்த்து ரசிக்கிறேன்.
                                                 கள்ளிச்செடி வரைந்த பலூன்



தோட்டத்துப் பக்கம் , பலூனும், சூரியனும்
Image may contain: sky, cloud and outdoor
மாடி பால்கனி அருகில் சென்ற போது 
நீலமேகத்திற்கு  நடுவில்

மதில் பக்கம் எட்டிப்பார்க்கும் கள்ளிச் செடி,  பலூன்,  மலை அழகு
Image may contain: sky, outdoor and nature
எங்கள் வீட்டுமதிலுக்கு அந்தப் பக்கம்
Image may contain: sky, outdoor and nature
 எங்கள் வீட்டு மரங்களுக்கு இடையில்
Image may contain: sky, cloud, outdoor and nature
அழகிய பஞ்சுபொதி மேகம் , மரங்களுக்கு இடையில் பலூன்


வீட்டின் முன் பூவை படம் எடுக்கும் போது கண்ணில் பட்ட பலூன் காமிரவில் சிறைபட்டது.

தங்கும் விடுதியில் பூத்தொட்டியில் பலூன்

கடையில் வாங்கலாம் என்று போனால் எல்லாம் விற்று விட்டது வெளியில் தொங்கும் பலூன் மட்டும் தான் இருக்கிறது என்றார்கள் அதை வாங்கி வந்து விட்டோம். தோட்டத்தில்    கட்டித் தொங்க விட்டோம். காற்றுக்கு சுற்றும்  போது அழகாய் இருக்கிறது.

பலூன்மாமா என்ற  பெயரில் வலைத்தளம் வைத்து இருக்கிறார். குழந்தைகளுக்கு வித விதமாய் பலூன்களில் பொம்மைகள் செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்வித்து அப்படியே மக்களுக்கு வேண்டிய  விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை சொல்கிறார். இவர் மகனும் பலூன் பொம்மைகள் செய்யும் இளம் பலூன் சிற்பியாம் பெருமையாக சொல்கிறார்.

இவர் தளத்திற்கு சென்று பார்த்தால் பலூன் பொம்மைகள் பார்க்கலாம்.
மெக்ஸிகோவில் அக்டோபர் மாதம் பல நாடுகளிலிருந்து வண்ணபலூன்கள் கலந்து கொள்ளும் பறக்கும் பலூன் விழா நடக்குமாம். பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.


Image may contain: people standing, mountain, sky, plant, outdoor and nature

 வீட்டைச் சுற்றி மலைகள்தான். ஊர் முழுவதும் அழகான மலைகள் வித விதமாய்.

மலை அழகை  இன்னொரு பதிவில். சூரியன் உதிப்பதும் மறைவதும் பார்க்க அழகாய் இருக்கிறது.

                                                             வாழ்க வளமுடன்.!
சாந்தி நிலைய பாடல்.


ஆலோவீன் திகில்

$
0
0



ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

 ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிக்காய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர்த் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.


ஆலோவின்  தின கொண்டாட்டம் 2013ல் எழுதிய  பதிவு. நியூஜெர்சியில் நடந்த கொண்டாட்ட படங்களை பார்க்கலாம்.

கீழே வரும் படங்கள் அரிசோனாவில் எடுத்த படங்கள்.


மகன் செய்த ஆலோவீன் டிராகன் வாயிலிருந்து கலர் புகை வரும்  காணொளி  பிறகு
Image may contain: 1 person, smiling, hat and closeup
கடையில் பேரன் 
No automatic alt text available.


பக்கத்து வீடுகளில் 




Image may contain: outdoor


Image may contain: one or more people, people standing, tree and outdoor


Image may contain: one or more people, people standing and outdoor
திகில் ஊட்டும் காட்சி






கடையில்


கடையில் சூனீயக்காரி, டைனோசர் எலும்பு கூடு

கார் கண்காட்சியில் பெரியவர்கள்  பிச்சைக்காரர் வேடமிட்டு



கார் கண்காட்சி நடந்த இடத்தில் ஆலோவீன் அலங் காரங்களுடன் மக்கள்


முன்னோர்களை  வணங்கும் நாளாகவும் இருக்கிறது.

மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.


மன உறுதி ,பயமின்மை போன்றவற்றை வளர்க்கவும் ஆலோவீன் திருவிழா பயன்படுமே..!

குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் வேடமிட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்வது முன்னோர்களின் ஆசிதான்.
                                                            வாழ்க வளமுடன்.

பரங்கிக்காய்த் திருவிழா

$
0
0
இந்த இடத்தில் தான் பரங்கிக்காய்த் திருவிழா நடந்தது.அக்டோபர்  20  தேதியிலிருந்து 29ம் தேதிவரை (2017). பாலைவனப் பூங்காவில்  நடைபெற்ற பரங்கிக்காய்த் திருவிழாவிற்கு அழைத்து சென்றான் மகன்.  பீனிக்ஸிலிருந்து 20 நிமிடப் பயண தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.  
ரே பற்றிய தகவல் பலகை

 .
அக்டோபர் மாதம் ஆலோவின் கொண்டாட்டம் 31ம் தேதி.  அந்த சமயத்தில் நடந்த விழா.

அக்டோபர் மாதம் பறங்கிக்காய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

இவர் தான் இந்த பரங்கிக்காய்ச் சிற்பங்களை   உருவாக்கியவர். இவர் பேர் ரேவில்லாஃபேன். பனியிலும் சிற்பங்கள்  செய்வாராம்.

பறங்கிக்காயைச் செதுக்கிச் சிற்பங்கள் செய்த கலைஞர் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

அழகான் கள்ளிச் செடிகள்

பரங்கிக்காய் கண்காட்சி நடந்த இடத்தில் அழகான கள்ளிச் செடிகள்.  உயரமாய் அதைச் சுற்றி வண்ண விளக்குகள் ,மரத்தை சுற்றி வண்ணவிளக்குகள்.. மற்ற இடங்கள் எல்லாம் இருட்டு. ஒருவர் பின் ஒருவராகப் போய்ப் பார்த்தோம் கூட்டம் நிறைய . பார்வை நேரம் மாலை ஆறு முதல் இரவு 9 மணி வரை. எல்லோரும் அலைபேசியிலும், காமிராவிலும் படம் எடுத்து கொண்டு நகர்வதால் வரிசை மெதுவாக நகர்ந்து போனது.

  அதிகமாய் காய்த்த பரங்கிக்காயை வைத்து அழகான  கண்காட்சி.  உணமையான பரங்கிக்காயில் செய்தவை கள்ளிச்செடிக்குள் கண்ணாடிக் கூண்டுக்குள் பத்திரமாய் இருந்தது




மற்றவை  செயற்கை பரங்கிக்காய்கள். திறந்த  வெளியில் ஒருவாரத்திற்கு மேல் இருந்தால்  கெட்டுப் போய் விடும், காட்டுப் பன்றிகள் வந்து அவற்றைத் தின்று விடும் என்பதால்  செயற்கை பரங்கிக் காயில் கண்காட்சி.  கற்பனை திறனைக் கொண்டு  நிறைய காட்சிகள் அமைத்து இருந்தார்.செயற்கைப் பரங்கிக்காயிலும் உண்மையான பரங்கிக்காய் போல் செய்வதைப் பாராட்டத்தான் வேண்டும்

நம் நாட்டில் நிறைய சமையல்   கலைஞர்கள், கலைத்திறன் கொண்டவர்கள், கல்யாணம் விழா மற்றும் விருந்து விழாக்களில்  அழகாய் செய்வார்கள்.  


  


ஜெயில் காட்சி, தூக்குமேடைக் காட்சி, குத்துச் சண்டைக் காட்சி , பேப்பர் படிக்கும் காட்சி   நீச்சல்குளத்தில் குளிப்பது என்று இன்னும் நிறைய காட்சிகள்   இருக்கிறது. 

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், நடந்து நடந்து களைப்படைந்து தாகம் , பசி எடுத்தால் உணவு விடுதி, ஐஸ்கீரிம் கடை என்று இருந்தது.  வீட்டுக்குப் பரங்கிக்காய் வாங்கிச் செல்ல கடை, பரங்கிக்காயில் வித விதமான பொம்மைகள் எல்லாம் இருந்தன. 


ஒற்றைக் காலில் தவம் செய்கிறார்
பத்மாசனத்தில் மரத்தடியில் தவம் செய்கிறார்

காலைத் தூக்கி யோகா
வியாபாரம் செய்யும் பரங்க்கியார்
நண்பர் வீட்டுக்குப் போகிறார்
வாசலில் வரவேற்பு
படியில் அமர்ந்து அரட்டை
எவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வந்து இருக்கிறார்கள்     வெளியில் வந்து பாரு 
குளிருக்கு இதமாய் மரவீடு வைக்கோல் மெத்தை


மாட்டு வாண்டி பூட்டிக்கிட்டு போவோம் திருவிழா பார்க்க


                                                     மர வேலை செய்யும் பெரியவர்

முகத்திற்கு அழகு செய்யும் அழகுக் கலைஞர்
 ராக் இசை பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடி முடித்த அழகான பெண் குழந்தைகளுக்குப்  பளபளக்கும் வண்ண பாசி மணி மாலைகளைக் கொடுத்தார். பேரனுக்கும் கொடுத்தார் 


அடுத்த பதிவில்  மீதி காட்சிகள்.

வாழ்க வளமுடன்.


பரங்கிக்காய்த் திருவிழா பாகம் -2

$
0
0
முந்திய பரங்க்கிக்காய்த் திருவிழா பதிவு பார்க்காதவர்கள் ப்பார்க்கலாம்.


பூதத்தை ஏணிமேல் ஏறி கத்தியால் வெட்டுகிறது,  பக்கத்தில் பியானோ வாசிக்கிறது
காப்பியுடன் பேப்பர் படிக்கிறது

மேலும், கீழும்   முகம் காட்டும்  கலை
குத்துச்சண்டை

குத்துச்சண்டை செய்யும் போது முகபாவம்  எப்படி?

காத்துருப்பு எதற்கு என்று தெரிகிறதா?
விஞ்ஞானி
காட்டுவாசியிடம் மாட்டிக் கொண்டு வேகவைக்கப் படுகிறது தீயில்

ஜெயில் கைதிகள், உயர் காவலர் உள்ளே, வெளி காவலர்


தூக்குமேடை 
தூக்கில் போடுவதைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள்

சூனியக்காரனிடம் மாட்டிக் கொண்டது, வண்டி முன்னும் பின்னும் சிலதுகளை கட்டி இழித்து செல்கிறான்.


நண்பர்களைக்  காப்பாற்ற சாகசம் செய்கிறது
நீச்சல் அடிக்க மேலே ஏறுகிறது

மேலே இருந்து குதிக்கிறது
மல்லாந்து படுத்து  நீச்சல்



                          நீச்சல் குளத்திலிருந்து குளித்து முடித்து ஏறுகிறது

இடுப்பில் ஒரு குழந்தை, தள்ளு வண்டியில் ஒரு குழந்தையுடன் திருவிழா
 பார்க்க வந்த தாய்



கரீபியன் பொக்கிஷத்தைப் பார்க்க டிக்கட் வாங்கிப் பார்க்க வேண்டும்.

குழந்தைகள் களித்து விளையாட இரண்டு விதமான சறுக்கு மரம்.
பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சிகள்.
வாழ்க வளமுடன்.

அழகு ரதம் பொறக்கும்

$
0
0

எங்கள் பிளாக் ஸ்ரீராம் கதை கேட்ட போது  என்ன எழுதுவது என்று மிகவும் யோசித்தேன். ஒரே ஒரு கதைதான் எழுதி இருந்தேன்., அதுவும் குட்டிக் கதை.
அதுவும் எங்கள் ப்ளாக்கில் இடம்பெற்று இருக்கிறது.

அவர் தளத்தில்   எனக்கு முன்பு கதை எழுதியவர்கள் கதை எல்லாம் மிக அருமையாக இருந்தது. என்ன கதையை எழுதுவது என்ன எழுதுவது என்று யோசித்தபோது என் அன்பு மதினியின் நினைவு வந்தது அவர்களைப் பற்றிய கதையை எழுதி  அனுப்பினேன், முடிவை மாற்றி.

ஸ்ரீராம் அப்பா கேட்டுக் கொண்டபடி  சீதை ராமனை மன்னித்தாள் என்று முடித்து மகிழ்ச்சியாக வலம் வந்தாள் என் அன்பு மதினி.

'எங்கள் ப்ளாக்'  தளத்தில் கடந்த முப்பது நாட்களில்  அதிகம் படித்ததாக இடம்பெற்ற பதிவுகளில் என் கதையும் இடம் பெற்றது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

தமிழ்மண வாக்கும் அதிகம் கிடைத்தது மகிழ்ச்சி.
வாக்கு எங்கள் ப்ளாக்கில் எழுதியதால் கிடைத்தது.

 என் கதை 24 வது கதையாக இடம்பெற்றது.

என் எழுத்தைப் படித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வலை  நட்புகளுக்கும் நன்றி.
கேட்டு வாங்கிப் போட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.


எங்கள் ப்ளாக் தளத்தில் படித்து இருப்பீர்கள்.  இங்கு பகிர்ந்த கதையில் சின்ன மாற்றம் கதை முடிவில் - படித்துப் பாருங்கள்.

ஸ்ரீராம்! உங்கள் தளத்தில் கதை வந்ததால் நீங்கள்  கருத்து சொல்லவில்லை.
படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.


பத்மா, பழனி இருவரும் மிக  மகிழ்ச்சியாக தங்கள் மணநாளைக் கொண்டாடினர். பத்மாவின் மாமியார் ஆசிர்வாதம் செய்யும் போது சீக்கிரமாய்ப்  பேரனைப் பெற்றுக் கொடு பத்மா என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.


பழனிக்கும் பத்மாவிற்கும் அந்த ஆசை இருந்தது . திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் போதே, எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே வளர்கின்றன.  குழந்தைப் பருவம் மாறி,  கன்னியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்புறம் அவளை நல்ல வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தன் குலம் தழைக்க   அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு புது மலரை எதிர்ப்பார்ப்பது     என்று தொடரும் எதிர்பா ர்ப்புகள்  மனித இயல்பு. 


இப்படித்தான் பத்மாவிடம் எல்லோரும் எதிர்பார்த்தனர்.



பத்மாவின் பெற்றோர்  அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். பத்மா  தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்தாள்.  அத்தை வீட்டு மாமாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும்.   விடுமுறைக்கு அத்தை வீடு போவாள்,  மாமா அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை அவளுக்குச் சுற்றிக் காட்டுவார்.  விடுமுறை நாட்களை அத்தை குழந்தைகளுடன் கழித்து வந்த அனுபவங்களைத் தாத்தா, பாட்டி, சித்தப்பாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து, அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக்  காத்து இருப்பாள் , அத்தை குழந்தைகளும் பத்மா மதினி வரும் நாளை எதிர்பார்த்து இருப்பர்.



தாத்தாவும், பாட்டியும்  இறைவனிடம் சென்றுவிட்டார்கள், பத்மா பள்ளிப் படிப்பை முடித்த சமயம்.   அதன் பின் அத்தை வீட்டிலேயே இருந்து தட்டச்சு கற்றுக் கொண்டு அத்தைக்கு உதவியாக இருந்தாள்.
அத்தை வீட்டு மாமாவும் பத்மாவைத் தன் மூத்த மகளாகப் பாசத்தைக் காட்டி வளர்த்தார்.


 அத்தையும், மாமாவும் நல்ல வரன் பார்த்து  திருமணம் முடித்து வைத்தார்கள். பத்மாவின் சித்தப்பாவிற்கும், பத்மாவிற்கும்  ஒரே நாளில் திருமணம் நடந்தது. சித்தி கருவுற்றாள் பத்மா மாமியாரின்  எதிர்பார்ப்பும் வளர்ந்தது . இரண்டு பேருக்கும் ஒண்ணா திருமணம் ஆனது -உன் சித்திக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, உனக்கு ஒன்றும் காணோம்  என்று பேசினார்கள். , வீட்டுக்கு வரும் உறவினர்களும்  கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


பத்மா தன் அத்தையிடம் சொல்லி வருந்தினாள் . அத்தை,  "உனக்கு   குழந்தை பிறக்கும்...  மகிழ்ச்சியாக இரு, மனதில் கவலையுடன் இருக்கக் கூடாது,  இறைவனுக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும் அப்போது கொடுப்பார்"என்று ஆறுதல் படுத்தினார்.


 அவள் அத்தைக்கு  அடுத்து அடுத்து குழந்தைகளைக் கொடுத்த ஆண்டவன் அவளுக்கு ஒன்றைத் தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை பத்மாவிற்கு.  வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது  இறைவனின் விளையாட்டு தானே!


ஆண்டுகள் சென்றது, யார் என்ன பிரார்த்தனை செய்யச் சொன்னாலும், செய்தாள்.  பக்கத்துவீட்டு  அனுபவம் மிக்க  பெண்மணி வாழைப்பழத்தில் பிள்ளைப் பூச்சியைப் பிடித்து உள்ளே விட்டு அது வெளி வந்தவுடன் அந்த பழத்தை உண்ணச் சொன்னார், முகம் சுளிக்காமல் அதையும் செய்தாள் பத்மா. சஷ்டி விரதம் இருந்தாள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் " -இது பழமொழி ."சஷ்டி விரதம் இருந்தால்  கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.


 வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், பலித்துக்   கருவுற்றாள் பத்மா உற்றார், உறவினர் அக்கம் பக்கம் எல்லோரும் மகிழ்ந்தனர் .
பதமாவிற்கும், பழனிக்கும்  ஒரு  சினிமாப் பாடல் பிடித்துப் போனது. அது;-
 'அழகு ரதம் பொறக்கும், அது அசைந்து அசைந்து நடக்கும் ' 
கற்பனையில், திளைத்தனர், ஆனந்தக் களிப்பில் மிதந்தனர்.


 தகுந்த காலத்தில் பெண் குழந்தை  பிறந்தது, தனக்குச் சாந்தி அளிக்கப் பெண் பிறந்தாள் என்று 'சாந்தி'என்று பெயர்  சூட்டினாள்.  குடும்பவழக்கப்படி மாமியார் பேர் வைத்தாள். அவள் பெரியவர்கள் பேர் சொல்லி அழைக்க முடியாதே(மரியாதைக் குறைவு ஆகிவிடும்) அதனால்   சாந்தி  என்று அழைத்து மகிழ்ந்தாள்.


 மலடி என்ற பேரை கொடுக்காமல்  குழந்தையைக் கொடுத்துப் பின் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையும்  கொடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையைத்  தன் பக்கம் எடுத்துக் கொண்டார் இறைவன். பத்மா, துடித்தாள்! துவண்டாள்!  'குழிப் பிள்ளை மடியில்'என்று  வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.


அத்தை குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைந்து ஆறுதல் அடைந்தாள்.  இரண்டு மூன்று வருடங்களில்  மீண்டும் கருவுற்றாள்.  அவள் கணவர் பிரவசத்திற்குப் பத்மாவை  அத்தை வீட்டுக்கு அனுப்பும் போது, "பத்மா! இந்த முறை  மகன் பிறப்பான்.நான் பட்டுப்புடவையுடன் வருகிறேன்"என்று வழி அனுப்பினான்.


 அத்தை , மாமா, அவர்கள் குழந்தையிடம் தன் அத்தானின் எதிர்பார்ப்பைச்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.


 பிரசவ அறைக்குப் போகும்முன் "குழந்தை பிறந்தவுடன் அத்தானுக்குப்   போன் செய்து விடுங்கள்"என்று அத்தை மாமாவிடம்  சொல்லி மலர்ந்த முகத்துடன் சென்றாள்.


குழந்தை பிறந்தான் பழனியின் எதிர்பார்ப்புப்படி, ஆனந்த வெள்ளத்தில் அத்தை, மாமா, பத்மா அகம் மகிழ்ந்தனர். பழனிக்குச் செய்தியைச் சொல்லி விட்டு  அனைவருக்கும்   தனக்குப் பேரன் பிறந்து இருக்கிறான் என்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பத்மாவை தன் மூத்த  குழந்தையாக நினைத்த மாமா.


பழனி பத்மாவையும்  குழந்தையையும் பார்க்கத் துடித்துக் கொண்டு இருந்ததில்  பத்மாவிற்கு கொடுத்த வாக்கை மறந்தான் , பட்டுப்புடவை வாங்கவில்லை. வெறுங்கையுடன்  வந்தான்.  


ஆனால் பத்மா  வருத்தப் படவில்லை, கோபப்படவில்லை,  அவளுக்கு  மகன் பிறந்த பூரிப்பில் முகம் மலர்ந்து இருந்தது.   தனக்குக் குழந்தை பிறந்த  மகிழ்ச்சியைவிட பட்டுப்புடவை ஒன்றும் பெரிதல்ல என்ற மன நிலையில் இருந்தாள்.  "சீதை ராமனை மன்னித்து விட்டாள்" .

--------------------------------------------------------------------------------------------------------------------------


ஸ்ரீராம் கேட்ட கதைக்கு மகிழ்ச்சியான முடிவாய் முடித்து கொடுத்து விட்டேன்.
இந்த கதையின் உண்மை கதாநாயகி  பிரசவ அறையில் ஜன்னி கண்டு இறந்து விட்டாள். 

அந்த விஷயம் கேட்டதும் தான் பத்மாவின் கணவர் பட்டுபுடவை வாங்காமல் ஓடி வந்தார்.


//அப்பாவி அதிரா:-

ஹா ஹா ஹா ரொம்ப சீரியஸ் ஆக்கிக்கொண்டு போய் முடிவில் ஒரு சேலையை வத்து டுவிஸ்ட் வைத்து ... ராமனை மன்னிக்கப் பண்ணிட்டீங்களே.... 

எனக்கு படிக்கப் படிக்க நெஞ்சு பக்குப் பக்கென்றது... பத்மாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என... நல்லவேளை நல்ல முடிவு... 

இருப்பினும் கோமதி அக்கா, பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) எனக்கு வாக்குக் கொடுத்திட்டால் அதை மீறுவது பிடிக்காது:)... அதனால பட்டுச்சேலையை வாங்கி வந்துவிட்டுக் குழந்தையைத் தூக்கச் சொல்லுங்கோ:).. அல்லது சேலை வாங்காததுக்கு நியாயமான காரணம் சொல்லும்படி கேட்கச் சொல்லிப் பத்மாவிடம் சொல்லி விடுங்கோ..:).//

என்று பின்னூட்டம் போட்ட அதிராவிற்கு நான் அளித்த பின்னூட்டம் கீழே :-

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
கதையைப் படித்து அதன் முடிவையும் கண்டு பிடித்துவிட்டீர்கள் . அதி புத்திசாலி. குழந்தை மனம் கொண்ட அதிராவிற்குள் நடந்து இருப்பதை உணரும் தன்மையும் இருக்கிறது. 

ஶ்ரீராம் கேட்ட கதைக்கு இந்த முடிவு. ஶ்ரீராம் தளத்தில் மகிழ்ச்சியாக  இருக்கட்டும் பத்மா.

கருத்துக்கு நன்றி அதிரா.


என் தளத்தில் மீதியைப் போடுகிறேன் என்றேன். அந்த மீதி சோகக் கதை:-


அதிரா பத்மாவிற்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று   பயந்துவிட்டேன் நல்லவேளை நல்ல முடிவு என்றார். அப்படி நல்ல முடிவாய் இருந்து இருக்கலாம்.அப்படி இல்லாமல் போய் விட்டது.

தன் குழந்தையைப் பார்த்து  முகம் மலர்ந்து சிரித்த சிரிப்புடன்  அவள் கதையை முடித்து விட்டார் இறைவன் குழந்தையைக்  கொஞ்சக்கூட விடவில்லை.

எங்களை எல்லாம் சோகக் கடலில் மூழ்க வைத்து விட்டார் அன்பு மதினி பத்மா  .

பத்து நாட்களில்  பத்மா மதினி   குழந்தையும்  தன் தாயைத் தேடி போய்விட்டது. அங்கு தாயும் மகனும் மகிழ்ந்து இருப்பார்களோ!

                                                  வாழ்க வளமுடன்!








விதி வலியது

$
0
0


இதற்கு முந்திய பதிவில் அழகுரதம் பொறக்கும்

 எல்லோரும் விதி வலியது என்று ஏற்றுக் கொண்டு கருத்து கொடுத்து இருந்தார்கள்.
அதனால் எனக்கு பிடித்த பழைய பாடலை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
இதில் வரும் வார்த்தைகள் எல்லாம் மிக உண்மையான வார்த்தைகளாய் இருக்கும்.


S.C.கிருஷ்ணன் பாடிய மிகச் சிறந்த பாடல்.

வாழ்க வளமுடன்.


மனமகிழ் விழா

$
0
0
Image may contain: 7 people, people standing
நாடகத்தில் நடித்த குழந்தைகளும்  ஆசிரியர் ரத்னா அவர்களும்.
Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing
நத்தையார் அடுத்த தலைவர் 
Image may contain: indoor

Image may contain: 2 people, indoor
வாய்ப்புக்கு நன்றி சொல்லும் குழந்தைகள்.
Image may contain: 1 person, shoes
பேரன்

அரிசோனா தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா  போனவாரம்  நடந்தது. அந்த விழா நடத்திய நாடகத்தில் பேரன் கவின் ஓநாய் வேடத்தில் நடித்தான்.

கதை எழுதி இயக்கியவர் ரத்னா பாலாஜி என்பவர். இரண்டு மாதங்களாய் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தார். பெற்றோர்கள் ஒத்திகையை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வாரம் வைத்துக் கொண்டனர்.  ஓரு தடவை மேடை ஒத்திகை அரிசோனா யுனிவர்சிட்டி அரங்கத்தில்  நடந்தது.

நாடகத்தின் பெயர் :-
"யாரு அடுத்த தலைவர் ?'
காட்டில் காட்டு ராஜாவிற்கு. தானே காட்டை ஆள்வது அலுத்துப் விட்டது அதனால் தேர்தல் நடத்துகிறார். 

ஓவ்வொரு விலங்கும் தன் தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கிறது.
அதில் ஊர்வன எண்ணிக்கை அதிகமாய் இருப்பதால் காட்டு ராஜா முடிவுக்கு வருகிறார் .
நத்தையை ராஜா ஆக்குகிறார்.
அரிசோனா தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகம்.
குழந்தைகளின் ஆடல் பாடல், மற்றும் பெரியவரின் ஆடல், பாடல் என்று விழா இனிதாக நடந்தது.

https://youtu.be/r08COqZv3bg நாடகம் பார்க்க சுட்டி.


தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து   நாடகம்.
 தமிழைக் கற்க விருப்பப்படும் அயல் நாட்டுக் குழந்தையைப் பற்றிய கதை.
இக் கதைக்கு என் கணவர் வசனம் எழுதித் தந்தார்கள்.

அரிசோனாவிற்குத்  தமிழ் பரப்ப வந்த அகத்தியர்

அரிசோனாவில் இரண்டு குடும்பம்  ,  அரிசோனா  தமிழ்ப் பள்ளியில் படிக்கும்  பெண் குழந்தை உள்ள குடும்பம்.  தமிழ் பேசத் தெரியாத ஆண் குழந்தை உள்ள குடும்பம்
கும்பகோணத்தில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் ஸ்கைப்பில் ஆங்கிலத்தில் உரையாடுகிறான் அவர்கள் வருத்தப் படுகிறார்கள் தமிழில் பேசக்கூடாதா என்று கேட்கிறார்கள். 

விடுமுறைக்கு  கும்பகோணத்திற்கு பாட்டி வீட்டுக்கு வந்தனர்.  தமிழ் தெரியாத காரணத்தால் மற்ற குழந்தைகள் அவர்களை விளையாட்டுக்குச்
 சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர்., "குலை குலையாய் முந்திரிக்காய்"பாட்டுப்பாடி விளையாடுகிறார்கள்  அயல் நாட்டில் வாழும் பையனுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் விளையாட்டு புரியவில்லை.

ஊர் திரும்பிய பின் தமிழ் கற்ற பெண்ணின் அம்மா , அப்பா அரிசோனா பள்ளியில் உங்கள் மகனைச் சேர்த்து விடுங்கள் அவனும் எங்கள் பெண் பொன்னி போல் நன்கு படிப்பாள் தமிழ் என்கிறார்கள். அடுத்த முறை கும்பகோணத்திற்கு போனால் தாத்தா , பாட்டியிடம் பேசவும், தோழர்களுடன் விளையாடவும் தமிழ் கற்றுக் கொள்ள சம்மதிக்கிறான் .
நாடகத்தை இயக்கிய ஆசிரியரும் ,  நடித்த  குழந்தைகளும்.
அப்பா என்னை அழைத்து சென்றார்மிருகக்காட்சி சாலை பாட்டுக்கு வனவிலங்குகள் வேடத்தில் குழந்தைகள்.

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம் :- மூன்று குழந்தைகளும் தண்ணீர்  சிக்கனத்தை பற்றியும், எப்படி எல்லாம் ஆறு குளம் இருந்தன இப்போது நீர் இல்லா ஆறு குளங்களைப் பற்றிப் பேசினார்கள். கறுப்பு உடை போட்ட குழந்தைகள் பல்தேய்க்கும் போது, பாத்திரம் துலக்கும் போது அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போதும் தண்ணீரை திறந்து விட்டதை மறந்து விடுவதையும், தொலைக்காட்சி நாடகம் பார்த்து பெண்கள் கண்ணீர் வழிய தன்னை மறந்து இருப்பதையும் வருங்காலத்தில் தண்ணீருக்காக சகல உயிர்களும் கஷ்டபடுவதையும்  அழகாய் நடித்துக் காட்டினார்கள். நாடகத்தை எழுதி இயக்கியவர் சந்தியா அவர்கள்.

"வாழ்க தமிழ்"பாடல் 
                                                                       சினிமா பாடல்.

பல சினிமா பாடல் தொகுப்புக்கு ஆடல்

சினிமா பாடல்
வாத்திய இசை
"கல்யாணம் கல்யாணம்"பாட்டுக்குப் பெரியவர்கள் நடத்திய நாட்டிய நாடகம்
பரதநாட்டியம்


தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர்இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் எல்லோரையும் எடுப்பதற்குள்   நகர்ந்து விட்டார்கள். மருமகளும்  ஆசிரியர் பணியில் இருக்கிறார்.

ஆசிரியர்கள் எல்லாம் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.  அவர்களுக்குக் கிடைக்கும் வார இறுதி நாளில் தமிழ்ப்பள்ளி சேவைக்காக ஒதுக்கி சேவை செய்வது பாராட்டப்பட வேண்டியது.

பெண்கள் இரட்டை பாரம் சுமப்பவர்கள். வீட்டு வேலை அலுவலகப் பணி அதனுடன் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறார்கள்.

அரைமணி நேரம், ஒருமணி நேரம் எல்லாம் காரில் பயணித்து வந்து கற்பிக்கிறார்கள்.குழந்தைகளை அழைத்து கொண்டு விடுவது கூட்டிச் செல்வது என்று பெற்றோர்களும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள ஆவலாகச் செயல்படுகிறார்கள்.
ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் சுவையான உணவைச் செட்டிநாட்டு உணவகத்தில் ஏற்பாடு செய்து அனைவருக்கும் வழங்கினார்கள்..

வரவேற்பு உரையிலும், நன்றி உரையிலும் இந்தியாவிலிருந்து   வந்து இருக்கும்  தாத்தா, பாட்டிகளை  வரவேற்று இறுதி வரை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்ததை பாராட்டியும் பேசினார்கள். (விழா மதியம் மூன்று மணி முதல் எட்டு மணி வரை நடந்தது. ) சிலரிடம் விழாவைப்பற்றி கருத்தும் கேட்டார்கள்.
சொன்னவர்கள் எல்லாம் சிறப்பாக நடந்ததையும், மேலும் சிறப்பாய் அடுத்த ஆண்டு நடக்கவும் வாழ்த்தினார்கள்.

அனைவரும்  இந்தியாவில் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாத விழாவை இங்கு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஏதாவது காரணம் வைத்துக் கொண்டு நண்பர்கள் ஒவ்வொரு வீடுகளில் நண்பர்கள் சந்திப்பு வைத்துக் கொண்டு  பேசிமகிழ்கிறார்கள்.

என் கணவர் வசனம் எழுதி கொடுத்த  நாடகக் குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு,, அவர்களை இயக்கிய ஆசிரியர்களில் ஒருவரான லலிதா அவர்கள் தமது வீட்டில் விருந்து தந்தார்கள். குழந்தைகள் அவர்கள் பெற்றோர் , மற்றும் எங்களையும் அழைத்து இருந்தார்கள்.

ஒவ்வொருவரும்  வீட்டிலிருந்து  சுவையான உணவு கொண்டு வந்து இருந்தார்கள்.
நாங்கள் காலை விரதம் என்பதால் மதியம் உணவுக்கு வருவதாய் சொன்னதால் விரதம் இருப்பவர்கள் முதலில் ஆரம்பித்து வையுங்கள் அப்புறம் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று அன்புடன் சொன்னார்கள். அப்பா, அம்மா, என்று அன்புடன் எங்களை அழைத்துப்பேசி மகிழ்ந்தார்கள். எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். 

அன்பென்ற மழையில் நனைந்த தருணம்!

                                                               வாழ்க வளமுடன்.

நீலவண்ண கண்ணா - ரசித்த பாடல்

$
0
0




இன்று மருதகாசி அவர்களின் நினைவு நாள்.





எனக்கு மிகவும் பிடித்த பாடல் -  நீலவண்ண கண்ணா வாடா- பாடல். கிருஷ்ணஜெயந்தி சமயம் வானொலியில்ஒலிக்கும் பாடல். இப்போது தொலைக்காட்சியிலும் கிருஷ்ணஜெயந்திக்கு வைக்கிறார்கள்.

பாலசரஸ்வதி அவர்களின் குரலில் குழைந்து, இழைந்து வரும் அன்புப் பாடல்.

 இந்தப் பாடலுக்காகத் திரைப்படத்தைப் பார்த்தேன்  அன்பு நிறைந்த கதை.



//÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி.//





//"நீலவண்ண கண்ணா வாடா''என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.

 ÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.//





                                               



"திரைக்கவித் திலகம் 'மருதகாசி பற்றி

ஆர். கனகராஜ் அவர்கள் எழுதியதை   பசுபதிவில் படித்தேன்  மருதகாசி அவர்களைப் பற்றி விரிவாக இருக்கிறது. படித்துப் பார்க்கலாம்.
பசுபதிவு அவர்களுக்கு நன்றி.
யூடியூப்பில் பகிர்ந்த அன்பருக்கும் நன்றி.



வாழ்க வளமுடன்.





ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்

$
0
0

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!

கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’ 

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.
காயத்ரீ மந்திரம் :-  நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ என்று 
முரு கனைப்பாடுகிறார். 

வள்ளலார் தீப வழிபாடு செய்தார். 

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியைத்  தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பென நினைத்துத்  தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:-:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதைப் பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விளக்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது. 

இசை மேதை தான்சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், 

தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை  நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது. 


சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியைத் தூண்டி,விளக்கை பிரகாசப்படுத்தியது. இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவால யத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவாலயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாகத் தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.




விஷ்ணுதீபம் :-



விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.



ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.



கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும். பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலூட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.

விளக்கு வழிபாட்டின் பயன்:



கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. 

கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.




 எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !

எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் !
                                                                     வாழ்க வளமுடன் !


=========================================================================

இயற்கையை அறிவோம் (படித்ததில் பிடித்தது)

$
0
0






திரு. என். கணேசன் அவர்கள் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள்,தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதி உள்ளார். ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்,  வாழ்ந்து படிக்கும் பாடங்கள் என்று நிறைய எழுதி இருக்கிறார். புத்தகங்கள் போட்டு இருக்கிறார். ஆங்கிலத்திலும், தமிழிலும் வலைத்தளம் வைத்து இருக்கிறார்.



இவர் பதிவுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது,  அதில் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.



 இந்த காணொளி பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன், என்று காணொளியின்  நிறைவில் சொல்லி இருந்தார். அதனால்  இங்கு பகிர்ந்தேன்.



அவர் சொல்வதைக்  கேட்கும்போது நன்றாக இருக்கிறது, ஆனால்

அந்த குழந்தையின் பக்குவத்தில் ஆனந்தமாய்  இருப்போமா  என்பதே நம்முள் கேள்வி. தோல்வியை, துயரத்தைத் தாங்கும் மனவலிமை, மீண்டும் உயிர்த்தெழும் தன்னம்பிக்கை இருந்தால் அவர் சொல்வது சாத்தியம்.  நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்றாலும் துவளாமல்இருக்கலாம்.



மார்கழி வரப்போகிறது 'மார்கழியில் ஆன்மீகமும் ,ஆரோக்கியமும்,'  என்ற கட்டுரை.

ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் வளர்க்கும்  மார்கழி மாதவழிபாட்டில் நாமும் ஈடுபட்டு இரட்டைப் பலன் அடைவோம் என்கிறார்.





"உடல்நலம் தரும் விரல் முத்திரைகள்"என்ற  பதிவு செயல்முறை விளக்கங்களுடன் இருக்கிறது.



மருந்துகள் இன்றி, பக்கவிளைவுகள் இன்றி  இருப்பதால்  உடல் ஆரோக்கியத்திற்கு செய்து பார்க்கலாம்.



"ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?" இந்த பதிவில் வரும் கடைசி வார்த்தை மிகவும் பிடித்தது:-



   //நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மை காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும்  பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே  இதெல்லாம் புரியும் போது அதுவரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.?/



"முதுமையிலும்  மூளையின் ஆற்றல் குறையாதிருக்க"என்ற பதிவு



முதுமையிலும் ஆற்றலைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லும் கட்டுரை.



"வயதில்லா உடலும் காலமறியா மனமும்"என்ற பதிவு என் போன்ற வயதானவர்களுக்குத்  தன்னம்பிக்கை தருவது.



வளமான "வாழ்விற்கு  வழிகள் பத்து"எல்லாம் நன்றாக இருக்கிறது. படித்துப் பாருங்கள்.



'எனக்கு வயதாகவில்லை, எனக்கு எதற்கு'என்று நீங்கள்

 கேட்பது கேட்கிறது.  வயதாகும்போது பயன்படும் கட்டுரைகள் படிக்கலாம் ஒருமுறை.



நான்  பின் தொடரும் வலைத்தளம்  . உங்களுக்கும் பிடித்து இருந்தால் தொடரலாம்.



                                                                      வாழ்க வளமுடன்.!

---------------------------------------------------------------------------------------------------------------------------
Viewing all 787 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>