யமுனோத்ரி (Yamunothri)
11/05/2012
டோலியிலிருந்து இறங்கி சற்று தூரம் நடந்து சென்று யமுனாதேவி திருக்கோயிலை அடைந்தோம்.. கூட்டமில்லை. நன்றாக வழிபட்டோம். எங்களை யாரும் விரட்டவில்லை. கஷ்டப்பட்டுப் போனாலும், தரிசனம் நன்றாக இருந்ததால் மனசுக்கு நிறைவாய் இருந்தது. நன்றாக
அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள்.
11/05/2012
![]() |
கோயிலை நெருங்கிவிட்டோம் |
யமுனை உற்பத்தியாகுமிடம் |
அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள்.
![]() |
யமுனாதேவி கோயில் |
யமுனோத்திரி கோவிலானது யமுனையின் இடதுபுறக் கரையிலேயே கட்டப்பட்டிருக்கிறது.
![]() |
யமுனாதேவி கோயில் |
பக்த்ர்கள் யமுனோத்ரியை தரிசிக்க உகந்த மாதம் மே, ஜீன், செப்டம்பர், மற்றும் அக்டோபர் மாதங்களாகும். நவம்பர் முதல், ஏப்ரல் வரை பனிக்கட்டிகள் மூடிக்கிடக்கும். ஆனால் மே முதல் செப்டம்பர் வரையிலும் குளிர் இருந்தாலும் நன்றாக இருக்கும்.
புராணம்:
![]() |
பூசைப்பொருட்கள் விற்கும் கடைகள் |
யமுனோத்திரியில் உள்ள வெந்நீரூற்றில், பக்தர்கள் குளிக்கின்றனர். அந்த தடாகத்தில் நிறைய நேரம் குளிக்க கூடாது என்று எங்கள் வழிகாட்டி சொன்னார். அந்த வெந்நீர்த் தடாகத்தில் கந்தகம் இருப்பதால் அதிக நேரம் குளித்தால் தோல் அரிப்பு எடுக்கும் என்றார். அருகில் ஒரு கிணறு போல் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அதில் கொதிக்கும் சூடான நீரிலிருந்து நீராவி வெளியே வருகிறது. அங்கு மக்கள் அரிசியை ஒரு துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, ஒரு கம்பில் கட்டி, வெந்நீருக்குள் வைத்துக் கையில் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த அரிசி வெகு சீக்கிரத்தில் சாப்பிடக்கூடிய அளவில் சாதமாக வெந்து விடுகிறது. ஒரு வட இந்தியக் குடும்பத்தினர் அவ்வாறு செய்த சாதத்தில் கொஞ்சத்தைப் பிரசாதம் போல் எங்களுக்குக் கொடுத்தனர். உண்டோம். நன்றாக வெந்திருந்தது. இதற்கென கடைகளில் சிறிய அரிசி மூட்டைகள் விற்கிறார்கள்.
கோயிலுக்கு அருகில் அனுமன் கோயில் உள்ளது. திரௌபதி குண்டு என்ற ஒரு சிறு வெந்நீர் ஊற்று உள்ளது.
யமுனை நதி இந்தக்கோயிலின் அருகில் தான் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள். இந்த இடத்திற்கு மேலேயும் மலைமீது யமுனைஆறு உள்ளது. சாதம் கொடுத்த குடும்பத்தினர் பெரிய ஐஸ்கட்டியை தலையில் வைத்துக் கொண்டு பரவசமாய் போட்டோ எடுத்துக் கொண்டனர் (குடும்பத்தினர் எல்லோரும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தலையில் வைத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்) நான் அவர்களிடம் ,’என்ன இது’ என்று கேட்டதும் அவர்கள் மேலும் பரவசமாய்,’ அம்மா (யமுனை)) உற்பத்தி ஆவது இங்கு தான். அந்த பாதையில் சிறிது தூரம் நடந்து போய் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் அதை எடுத்து வந்தார். நீங்களும் சாப்பிடுங்கள். நோய் நொடி இருக்காது ‘ என்று என் வாயில் போட்டார்கள். கொஞ்சம் அந்த ஐஸ்கட்டியை உடைத்து என் கையில் கொடுத்தார்கள். புண்ணிய தீர்த்தம் சேகரித்த பாட்டிலில் அதை போட்டுக் கொண்டேன், எல்லோருக்கும் கொடுக்கலாமே என்று.
![]() |
அரிசி வேகிறது! |
![]() |
அரிசி வெந்துவிட்டது |
கோயிலுக்கு அருகில் அனுமன் கோயில் உள்ளது. திரௌபதி குண்டு என்ற ஒரு சிறு வெந்நீர் ஊற்று உள்ளது.
![]() |
திரெளபதி குண்டு |
10.30 மணியளவில் யமுனோத்திரியிலிருநது டோலியில் புறப்பட்டோம். டோலியில் இறங்கும் போது இன்னும் கஷ்டமாக இருந்தது. வேகமாகத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். சில இடங்களில் நடக்கிறார்கள். பயமாக இருந்தது.
12.45 மணிக்கு ஜான்கிசட்டி பஸ்ஸ்டாண்டுக்கு வந்தோம். வழியில் இயற்கைக்காட்சிகள் அருமை. பனிபடர்ந்த மலையுச்சிகள் வானத்தை மறைக்கின்றன. யமுனை பல இடங்களில் சீறிப்பாய்கின்றது. பனி உருகி ஆறாகும் பகுதிகள் காணப்படுகின்றன். சில இடங்களில் பனியாறு உறைந்துபோய் இருந்தது.
ஊசியிலைக்காடுகள் அமைந்த மலைச்சரிவுகள்!
ஊசிக்கொண்டைவளைவுகளைக்கொண்ட சாலைகள்!
இவை அனைத்தும் கண்கொள்ளாக்காட்சிக்காட்சிகள்
பின்னர் 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு ராணாசட்டி மீண்டோம், நல்ல மழை! இடிமின்னலுடன். கரண்ட் கட் வேறு! 9 மணி வரை ஜெனரேட்டர் போட்டார்கள். அதன்பிறகு எங்கும் ஒரே இருட்டு தான்! .இங்கு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் வசதியாக இல்லை.
மறுநாள் உத்தரகாசி செல்ல வேண்டும்.
12.45 மணிக்கு ஜான்கிசட்டி பஸ்ஸ்டாண்டுக்கு வந்தோம். வழியில் இயற்கைக்காட்சிகள் அருமை. பனிபடர்ந்த மலையுச்சிகள் வானத்தை மறைக்கின்றன. யமுனை பல இடங்களில் சீறிப்பாய்கின்றது. பனி உருகி ஆறாகும் பகுதிகள் காணப்படுகின்றன். சில இடங்களில் பனியாறு உறைந்துபோய் இருந்தது.
பனிக்கட்டி உருகி ஆறாக ஓடத்தொடங்குதல் |
ஊசிக்கொண்டைவளைவுகளைக்கொண்ட சாலைகள்!
இவை அனைத்தும் கண்கொள்ளாக்காட்சிக்காட்சிகள்
அச்சமூட்டும் மலைப்பகுதிகள் |
மலைச்சரிவில் இயற்கைக்காட்சிகள் |
![]() |
பள்ளத்தாக்கு |
யமுனைப் பள்ளத்தாககு |
பனிமலையின் முன்னால் ![]() |
யமுனோத்ரி செல்லும் வழி |
பின்னர் 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு ராணாசட்டி மீண்டோம், நல்ல மழை! இடிமின்னலுடன். கரண்ட் கட் வேறு! 9 மணி வரை ஜெனரேட்டர் போட்டார்கள். அதன்பிறகு எங்கும் ஒரே இருட்டு தான்! .இங்கு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் வசதியாக இல்லை.
மறுநாள் உத்தரகாசி செல்ல வேண்டும்.
12.05.2012 அன்று காலை ராணாசட்டியிலிருந்து 6.50க்கு புறப்பட்டோம். புறப்பட்ட இடத்திலேயே டிராபிக் ஜாம். ஒரு மணி நேரம் கழித்துத்தான் வழி கிடைத்தது. மதிய நேரத்தில் சிவகுபா என்ற இடத்தருகே பஸ் நின்றது. அங்கு ஒரு சிறிய மலை மீது சிவனுக்கு குகைக்கோயில் உள்ளது.
கைப்பிடிச்சுவர் இல்லாத படிகள். இறங்குவது கடினம் என்றார்கள். நாங்கள் முக்கியமாக கேதார்நாத் தரிசிக்க வந்ததால் எல்லா இடங்களுக்கும் சென்று களைத்து போக வேண்டாம் என்று எங்கள் சக்தியை சேமிக்க நினைத்ததால் போகவில்லை. சிலர் சென்று வந்தார்கள். அக்கோயிலில் பஞ்சலிங்கங்கள் உள்ளனவாம். ஐந்தாறு பேர் தான் ஒருசமயத்தில் சந்நிதிக்குள் செல்லலாமாம். சந்நிதியில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டிருக்குமாம். வரிசையில் வெகுநேரம் நின்று பார்த்து வந்தார்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பல இடங்களில் மலைப்பகுதிகளில் இயற்கையாகக் கிடைக்கும் கல் பலகை போன்றவற்றை எடுத்து வீட்டின் கூரைகளாகப் பயன்படுத்துகிறார்கள். பார்ப்பதற்கு மெலிதான கடப்பைக்கல் போல் உள்ளது.
சிவகுபா நுழைவாயில் |
கல்பலகைகளால் அமைந்த வீட்டுக்கூரை |
மதிய உணவை உண்டபின் மீண்டும் பயணம் செய்து சுமார் 5 மணியளவில் உத்தரகாசி சென்றடைந்தோம். அங்கு தங்குமிடம் செல்லுவதற்கு முன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம்.
கோயில் தரிசனம் முதலிய செய்திகள் அடுத்த பதிவில் !
(தொடரும்)
கோயில் தரிசனம் முதலிய செய்திகள் அடுத்த பதிவில் !
(தொடரும்)