Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all articles
Browse latest Browse all 789

திருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி -1

$
0
0


                                                                           

               திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி -1
                                             (KEDHARNATH)

நாங்கள் கேதார்நாத் , பத்ரிநாத் ,யமுனோத்திரி , கங்கோத்திரி ஆகிய 

இடங்களுக்குச் செல்ல  முடிவுசெய்து , ‘மனோகர் டிராவல்ஸ் ’ மூலம் 

திருவருள் துணையோடு 03.05.2012 வியாழன் அன்று, சார்தம் தரிசன்என்று அழைக்கப்படும்  ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டோம்.

மயிலாடுதுறை இல்லத்தில் இருந்து  காலை 10 மணிக்குப் புறப்பட்டு இரயில்வண்டி நிலையம் அடைந்தோம். 11.30 மணிக்கு சோழன் விரைவு வண்டியின் மூலம் சென்னை புறப்பட்டோம். மாலை 5.45 மணிக்கு எழும்பூரை அடைந்தோம். ஆட்டோ பிடித்து வேளச்சேரிக்கு இரவு 7.30 மணிக்குச் சென்றோம். கணவரின் அண்ணன் வீட்டில் தங்கி , மறுநாள் 04.05.2012 வெள்ளி காலை 6.20 மணிக்கு துரந்தோ விரைவு வண்டி மூலம் பயணித்தோம். 05.05.2012 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு டில்லி அடைந்தோம்.

டெல்லியில் எங்களின் மகள் இருப்பதால், இரண்டு நாட்கள் பெண் வீட்டில் பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து இருந்தோம்.

08.05.2012 அன்று பிற்பகல் 3,00 மணிக்கு ஹரித்துவார் நோக்கிப் புறப்பட்டோம்.

எங்கள் மகள் ரயில் நிலையத்திற்கு வழி அனுப்ப வந்தாள். அங்கு ரயிலுக்கு காத்திருந்த போது  ஒரு குடும்பம் வந்து எங்கள் முன்பு அமர்ந்தார்கள் அவர்கள் குழந்தையை அங்கேயே குளிப்பாட்டி அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் பாட்டி,  பின் கண் திருஷ்டி கழித்தவிதம் வியக்க வைத்தது. ஒரு செருப்பை எடுத்து குழந்தையை அடித்து அதே செருப்பால் சுத்தினார்கள். 
ரயில் வரும் வரை அந்த குடும்ப பாசம் எங்களை அவர்களிடம் கட்டிப்போட்டு விட்டது.



                      வியக்க வைத்த குடும்பம்

ரயிலுக்கு காத்திருப்பு

ஹரித்வார் செல்ல சிலீப்பர் கோச்சில் முன்பதிவு செய்திருந்தோம்,
ஆனால் அதில் பதிவு செய்யாதோர் பலர் முன்பே வந்து எங்களின் இருக்கைகளில் வந்து அமர்ந்துகொண்டனர். வடஇந்தியாவில் இது வழக்கம் தான். இருந்தாலும் இரவுக்குள் ஹரித்துவார் சென்றுவிட்டபடியால் படுக்கையில் உறங்கும் அவசியம் இல்லாமல் போயிற்று. படுக்கை வசதி செய்த எங்களுக்கு அவர்கள் உட்கார இடம் கொடுத்ததே பெரிய விஷயம் தான். 

முன்னதாக டில்லி நிலையத்தில் மனோகர் டிராவல்ஸ் கைடு திருவாளர் ஆனந்த் அவர்களைச் சந்தித்தோம். டில்லியிலிருந்து 22 பேர் கொண்ட குழு புறப்பட்டது. எங்களைத் தவிர மற்றவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தனர். வெவ்வேறு பெட்டிகளில் எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மூன்று, நான்கு மணி நேரப் பயணம் கடினமாக இருநதது.  அதன் பின்னர் கூட்டம் குறைந்து விட்டபடியால் பயணம் நன்றாக அமைந்தது. இரவு 9 மணி அளவில் ஹரித்துவார் சென்றடைந்தோம்.
ஹரித்வார் ரயில்நிலையம்
                                                 
ஆட்டோ பிடித்து ’ஓட்டல் கைலாஷ்’ சென்றடைந்தோம். அது ஸ்டேஷனுக்கு எதிரில் தான் இருக்கிறது. அங்கு அறைகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.  இந்தப் பயணத்திற்கு உணவு தயாரிப்பதற்கென மூவர் கொண்ட சமையலாளர் குழு கூடவே வந்தது.

சாப்பாடு தயார்
09.05.2012 அன்று காலை 7  மணியளவில் ஆட்டோவில் புறப்பட்டு ஹரித்துவார் ஆற்றங்கரை சென்று ஆற்றில் குளித்து, தங்கும் அறை மீண்டோம். கங்கைத் தண்ணீர் மிகக் குளிர்ந்து இருந்தது. அன்று காலை ஆட்டோ பிடித்து சண்டிதேவி கோயில், மானச தேவி கோயில் சென்று வந்தோம். இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. இரண்டுக்கும் ரோப்கார் வசதி உள்ளது. இரண்டு இடங்களுக்கும் செல்ல ஒரே டிக்கட் தான்.



சண்டிதேவிகோயில் முகப்பு

சண்டிதேவி கோயில் அருகில் அஞ்சனாதேவி அம்மன் கோயிலும் உள்ளது. ரோப் காரில் சென்ற பிறகு கொஞ்சம் படிகள் ஏற வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ரோப் காருக்கு காத்திருந்து ஏற வேண்டியிருந்தது. தேவஸ்தானத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. அஞ்சனாதேவி தன் மடியில் குழந்தை அனுமனை மடியில்  வைத்திருப்பது போல் உருவம்  மூலஸ்தானத்தில் உள்ளது. 


ரோப் காருக்கு காத்திருக்கும் பக்தர் கூட்டம்

மானசதேவி கோயிலுக்கு ரோப்கார்
மானசதேவிகோயிலின் நுழைவாயில்

பிற்பகல் சற்று ஓய்வு எடுத்தோம். மாலை 6 மணியளவில் கங்கைக்கரையில் கங்காதேவி சந்நிதிக்கு முன் ஆரத்தி பார்க்கச் சென்றோம். ஆட்டோவில் கொஞ்ச தூரம் சென்று பின் நடக்க வேண்டும். கூட்டம் அதிகம் இருப்பதால் கரைவரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

கரையில் கூட்டம் அதிகம். பாலம் வழியாக மறுகரை(தீவு போன்ற பகுதிக்குச்) சென்றோம். கங்காதேவியின் கோயிலுக்கு நேர் எதிரே மறுகரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். அமர்ந்து இருக்கும் போது அங்கே நன்கொடை ரசீது வைத்துக் கொண்டு பணம் கேட்கிறார்கள். அவர்கள் நிறைய பேர் சீருடை அணிந்து கொண்டு அடையாள அட்டைகள் சட்டையில் குத்திக் கொண்டு நம்மை சுற்றி வருகிறார்கள். கீழே அமர சீட் கவர் விற்பவர்கள் ஒருபுறம் நம்மை சுற்றி வருகிறார்கள். தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு ’தண்டா பானி!  தண்டா பானி’ என்று நம்மிடம் விற்கிறார்கள். சீறிப்பாயும் கங்கை நதியின் கரையில் இருந்தாலும் குடிதண்ணீருக்கு மினரல் வாட்டர் தான்! 

எங்கும்  ஒரே சத்தம்,. 

அங்கு மணிக்கூண்டு இருக்கிறது-பழைய டவர். கடிகாரம் நின்று பலகாலம் ஆகியிருந்தது. அது ஹரித்வாரின் அடையாளச்சின்னம்.

சீடர்களுடன் சங்கராச்சாரியர் அமர்ந்திருக்கும் உருவங்கள் அமைந்த மண்டபம் ஒரு புறம் அமைந்துள்ளது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து ஆரத்தி பார்க்க முடியாது போலிருந்தது. எனவே அங்கிருந்து எழுந்து கொண்டோம். வேறு நன்கு பார்க்க முடிகிற இடம் பார்த்து அங்கு சென்றோம். 


மினரல் வாட்டர் வியாபாரம் படுஜோர்!


கங்காதேவிகோயில




மாலையில் சரியாக 7 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது. கங்கை 

அம்மனுக்கும், கங்கை ஆற்றுக்கும் பெரிய அடுக்கு தீபாராதனைகள் 

நடைபெறுகின்றன.  தீபாராதனை நடக்கும் நேரத்தில்  பாலத்தில் 

போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.  ஆரத்தி நேரத்தில் மக்கள் சிலர் 
\
தீபாராதனைத் தட்டை ஏந்தி சுற்றி அவரவர்களாகவே வழிபாடு 

செய்கின்றனர்.  பின்னர் இலைத்தொன்னையில் அழகாய் 

பூக்களுடன் அகல்விளக்குகளை   கங்கையாற்றில் மிதக்க 

விடுகின்றனர்.  அவை அழகாக ஒளிவிட்ட வண்ணம்   மிதந்து 

செல்கின்றன. சுமார் அரை மணி நேரம் பூசை நடக்கிறது.  பார்க்க 

அழகாய் இருக்கிறது. அதை தரிசித்த பின்னர் விடுதிக்குத் 

திரும்பினோம்.  பெருங்கூட்டம்.  ஆட்டோ, ரிக்க்ஷா கிடைப்பது 

அரிது,  எப்படியோ ஒரு  ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்து 

சேர்ந்தோம்.    மறுநாள் யமுனோத்ரிக்குப் புறப்பட்டோம்.
                                                                                                                                   (தொடரும்)

Viewing all articles
Browse latest Browse all 789

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>